பக்கம் எண் :

காங்கிரஸ் பணி ஆரம்பம் 585

Untitled Document
தோன்றுகிறது.      எனவே,    நினைவுச் சின்ன நிதியை எப்படிப்
பயன்படுத்துவது என்பது நாட்டு மக்களுக்கு  இப்பொழுது புரியாமல்
இருந்து வருகிறது.

     தீர்மானங்களைத் தயாரிப்பதில்      எனக்கு இருந்த ஆற்றல்,
காங்கிரஸ்      பயன்படுத்திக் கொள்ளக்கூடிய மற்றொன்று ஆகும்.
எதையும்     சுருக்கமாகக் கூறும்    ஆற்றலை,      நீண்ட கால
அனுபவத்தினால்        நான் பெற்றிருந்தேன்.   இதைக் காங்கிரஸ்
தலைவர்கள் கண்டு கொண்டார்கள். அப்பொழுது இருந்த  காங்கிரஸ்
அமைப்பு      விதிகள், கோகலே தயாரித்து வைத்துவிட்டுப் போன
ஆஸ்தியாகும். காங்கிரஸ் இயந்திரம்   நடந்துகொண்டு   போவதற்கு
அடிப்படையாக இருக்கக்கூடிய              சில விதிகளை அவர்
அமைத்திருந்தார். இந்த விதிகளைத் தயாரித்ததைப்பற்றிய ருசிகரமான
சரித்திரத்தைக்           கோகலேயின் வாய் மொழியாலேயே நான்
கேட்டிருக்கிறேன்.   காங்கிரஸின் வேலைகள் மிக அதிகமாகி விட்ட
இக்காலத்திற்கு இந்த விதிகள் போதுமானவைகளே அன்று என்பதை
இப்பொழுது         ஒவ்வொருவரும் உணர ஆரம்பித்து விட்டனர்.
இவ்விஷயம் ஆண்டுதோறும் காங்கிரஸின்   ஆலோசனைக்கு வந்து
கொண்டும் இருந்தது. காங்கிரஸின் ஒரு    மகாநாட்டிற்கும் மற்றொரு
மகாநாட்டிற்கும்   இடையிலும், ஓர் ஆண்டில் புதிதாக ஏற்படக்கூடிய
நிலைமைகளிலும், வேலை செய்வதற்கு      அச்சமயம் காங்கிரஸில்
எந்தவிதமான ஏற்பாடும் இல்லாமல் இருந்தது.      அப்பொழுதிருந்த
விதிகளின்படி, காரியதரிசிகள் மூவர் உண்டு. ஆனால்,   அவர்களில்
ஒருவர் தான் காங்கிரஸின் வேலைகளைக் கவனிப்பார். அவரும் முழு
நேரமும்        அவ்வேலையைக் கவனிப்பவரல்ல. அவர் ஒருவரே
எவ்விதம் காங்கிரஸ்       காரியாலயத்தை நடத்தி, எதிர்காலத்தைக்
குறித்துச் சிந்தித்து,      காங்கிரஸ் ஏற்றுக் கொண்டிருக்கும் பழைய
பொறுப்புக்களை           நிறைவேற்றி வைப்பதும் சாத்தியமாகும்?
ஆகையால், அந்த ஆண்டில் இந்த விஷயம்     மிக முக்கியமானது
என்று எல்லோரும்    கருதினார்கள். பொது விஷயங்களையெல்லாம்
காங்கிரஸ் மகாநாடே       விவாதிப்பதென்றால், அவ்வளவு பெரிய
கூட்டத்தைச் சமாளிப்பது கஷ்டம். காங்கிரஸு க்கு வரும் பிரதிநிதிகள்
தொகை இவ்வளவுதான் என்பதற்கோ,       ஒவ்வொரு மாகாணமும்
இத்தனை பிரதிநிதிகளைத்தான் அனுப்பலாம்     என்பதற்கோ எந்த
வரையறையும்   விதிக்கப்படவில்லை. இவ்விதம் அப்பொழுதிலிருந்த
குழப்பமான நிலைமையில் ஏதாவது          அபிவிருத்தி செய்தாக
வேண்டியது அவசியம் என்று     ஒவ்வொருவரும்  உணர்ந்தார்கள்.
காங்கிரஸின் விதிகளை அமைக்கும் பொறுப்பை, ஒரு நிபந்தனையின்
பேரில், நான் ஏற்றுக் கொண்டேன்.     பொதுமக்களிடையே அதிகச்
செல்வாக்குப்