பக்கம் எண் :

588சத்திய சோதனை

Untitled Document
இவ்வாறு நம் ஆலைகளில் தயாரிக்கும்   நூலைக் கொண்டு நெய்த
துணிகளை மாத்திரமே    நாங்கள் உடுத்துவது என்று தீர்மானித்து,
நண்பர்களிடையே இதை நாங்கள்     பிரச்சாரம் செய்ததன் மூலம்,
இந்திய            நூல் ஆலைகளுக்காக வலிய வேலை செய்யும்
ஏஜெண்டுகளாக நாங்கள் ஆனோம்.         இதனால், எங்களுக்கு
ஆலைகளுடன்           தொடர்பு ஏற்பட்டது. அதன் காரணமாக
அவர்களுடைய    நிர்வாகத்தைப் பற்றிய   சில விஷயங்களையும்,
அவர்களுக்கு இருந்த கஷ்டங்களையும்   நாங்கள் அறிய முடிந்தது.
தாங்கள் நூற்கும் நூலைக் கொண்டு தாங்களே     நெய்து விடவும்
வேண்டும் என்பதே ஆலைகளின் நோக்கம் என்பதைக் கண்டோம்.
கைத்தறி நெசவாளர்களிடம்    அவர்களுக்கு இருந்த ஒத்துழைப்பு,
விரும்பி அளிக்கும் ஒத்துழைப்பல்ல என்பதையும் தவிர்க்க முடியாத
நிலையில், தாற்காலிகமாக அளிப்பதே என்பதையும் கண்டோம். இந்த
நிலையில் எங்களுக்கு வேண்டிய நூலை நாங்களே நூற்றுக் கொள்ள
வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் கொண்டோம். இதை நாங்களே
செய்து கொண்டு விட்டாலன்றி,       ஆலைகளை நம்பி இருப்பது
என்பது இருந்து கொண்டுதான் இருக்கும்    என்பதும் தெளிவாகத்
தெரிந்தது. நூல் நூற்கும்       இந்திய ஆலைகளின் தரகர்களாகத்
தொடர்ந்து      இருந்து கொண்டு வருவதால்,   நாட்டிற்கு எந்தச்
சேவையையும் செய்ய முடியாது என்பதையும் உணர்ந்தோம்.

     நாங்கள் சமாளித்து ஆக     வேண்டியிருந்த கஷ்டங்களுக்கு
முடிவே இல்லை.       எப்படி நூற்பது  என்பதை நாங்கள் கற்றுக்
கொள்ளுவதற்குக் கைராட்டினமோ, நூற்பவரோ கிடைக்கவே இல்லை.
ஆசிரமத்தில் நெய்வதற்கான      நூலைக் கண்டுகள் ஆக்குவதற்கு
ஒருவகை ராட்டினத்தை உபயோகித்து வந்தோம். ஆனால், இதையே
நூற்கும்        ராட்டையாகவும் உபயோகிக்கலாம் என்ற விஷயமே
எங்களுக்குத் தெரியாது.          ஒருநாள் காளிதாஸ் ஜவேரி ஒரு
பெண்ணைக் கண்டுபிடித்தார். நூற்பது எப்படி என்பதை  அப்பெண்
எங்களுக்குக் காட்டுவார் என்றும் சொன்னார். உடனே ஆசிரமவாசி
ஒருவரை அந்தப்        பெண்ணிடம் அனுப்பினோம். இவர், புதிய
விஷயங்களை வெகு எளிதில்      கற்றுக் கொண்டுவிடும் ஆற்றல்
படைத்தவர் என்று            பெயர் பெற்றவர். ஆனால், இவரும்
அக்கலையின் இரகசியத்தைத்   தெரிந்து கொள்ளாமலேயே திரும்பி
வந்து விட்டார்.

     இவ்விதம் காலம்  போய்க்கொண்டே இருந்தது. நாளாக ஆக
நானும் பொறுமையை இழந்து வந்தேன்.     கையினால் நூற்பதைக்
குறித்து ஏதாவது தகவலை         அறிந்திருக்கக் கூடியவர்களாக
ஆசிரமத்திற்கு       வருவோர் போவோர்களிடம் எல்லாம் அதை
குறித்து விசாரித்துக் கொண்டு வந்தேன்.    இக்கலை பெண்களிடம்
மாத்திரமே         இருந்து வந்தாலும், அது         அநேகமாய்
அழிந்து     போய்விட்டதாலும்,    ஒருவருக்கும் தெரியாத மூலை
முடுக்குகளில் நூற்பவர்கள் யாராவது