கி.பி. 18ஆம் நூற்றாண்டில் தரங்கம்பாடி
இந்தியாவில் புராட்டஸ்தானிய கிறித்தவ சமயம் பரவுவதற்குக்
காரணமாக இருந்த மையங்களில் ஒன்றாக விளங்கியது.
கி.பி. 1845இல் எட்டாவது கிறிஸ்தியன் என்ற
டென்மார்க் மன்னரால் தரங்கம்பாடிக் கோட்டை ஆங்கிலக்
கிழக்கிந்தியக் கம்பெனிக்கு விற்கப்பட்டது. தற்பொழுது தமிழ்நாடு
அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறையினர் பொறுப்பில்
இக்கோட்டை உள்ளது. நல்ல நிலையில் இன்றும் காணப்படும்
கோட்டைப் பகுதி அதன் அழகிய வாயில், கோட்டையினுள்
உள்ள ஒரு மாளிகை, லூதர் சபையினருக்குரிய கிறித்தவ
ஆலயம், ஷியோன் ஆலயம் ஆகியவற்றை நாம் இன்று
இங்குக் காணலாம்.
மாயூரம்
பூம்புகாரிலிருந்து 29 கி.மீ. தொலைவில் மாயூரம் என்ற
மாயவரம் உள்ளது. இங்குச் சிவனது புகழ்மிக்க ஆலயம்
உள்ளது. இறைவன் மாயூரநாதேசுவரர் எனப்படுகிறார்;
இறைவி அபயாம்பிகை ஆவார். பார்வதி தேவி மயிலாக
இத்தலத்திற்கு வந்து சிவனை வழிபட்டதாகப் புராணம் கூறும்.
இதனால் மாயூரம் ‘திருமயிலாடுதுறை’ எனப்படும். அப்பர்,
சம்பந்தர் ஆகியோரின் பாடல் பெற்ற தலம். ஆதியில்
செங்கல்லினாலான கோவில் கி.பி. 10ஆம் நூற்றாண்டில்
செம்பியன்மாதேவியால் (உத்தமச் சோழனின்
தாய்)
புதுப்பித்துக் கற்கோவிலாகக் கட்டப்பட்டது.
சென்ற
நூற்றாண்டில் நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் விரிவான
திருப்பணியை இக்கோவில் கொண்டுள்ளது. இந்நகரிலுள்ள
மற்றொரு புகழ்மிக்க சிவாலயம் பஞ்சநாதேஸ்வரருக்குரியதாகும்.
தருமபுரம்
மாயூரத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் தருமபுரம் உள்ளது.
இங்குத் தருமை ஆதீனம் உள்ளது. தமிழ்நாட்டில் சைவ
சமயத்திற்கும், தமிழுக்கும் தொண்டாற்றிவரும் மடங்களில்
தருமையாதீனம் குறிப்பிடத்தக்கதாகும். கி.பி.16ஆம் நூற்றாண்டில்
வாழ்ந்த ஸ்ரீகுரு ஞானசம்பந்தர் இம்மடத்தை நிறுவினார்.
ஏராளமான, சிறந்த நூல்களைத் தமிழில் வெளியிட்டு
இம்மடம்
|