ஆதிகும்பேஸ்வரர் கோவில்
கும்பகோணத்திலுள்ள பழமைமிக்க மற்றொரு கோவில்
ஆதிகும்பேஸ்வரர் கோவில் ஆகும். இது நகரின் நடுவில்
அமைந்துள்ளது. சோழ மன்னர்களின் திருப்பணிகளையும்,
நாயக்க மன்னர்களின் திருப்பணிகளையும் இக்கோவில்
கொண்டுள்ளது. இறைவி மங்களாம்பிகை எனப்படுகிறார்.
சுவாமி சந்நிதியின்
கொடிக்கம்பம் அருகிலுள்ள தூண்
சிற்பங்கள், அம்மன் கோவில் சந்நிதியிலுள்ள தூண்
சிற்பங்கள்,
இக்கோவிலிலுள்ள கருங்கல்லினாலான நாகசுரம் ஆகியவை
சிற்பக்கலைச் சிறப்புமிக்கவை.
சாரங்கபாணி கோவில்
கும்பகோணத்திலுள்ள வைணவக் கோவில்களில் மிகப்
பழமை வாய்ந்தது சாரங்கபாணி கோவிலாகும். இது
ஆழ்வார்களின் பாடல் பெற்ற தலம் ஆகும். கருவறையிலுள்ள
தெய்வங்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின்
நடுப்பகுதி தேரின் அமைப்பைக் கொண்டுள்ளது. இதன்
குதிரைகள், யானைகள் ஆகியவையும், சக்கரங்களும்,
கல்லினால் ஆனவை. இக் கல்தேர் ஒரு சிறந்த கலைப்படைப்பு.
இக்கோவிலின் மற்றொரு சிறப்பு இங்குள்ள கோபுரத்தில்
நாட்டிய சாஸ்திரத்தின் 108 கரண வகைகள் சிற்பங்களாகச்
செதுக்கப்பட்டிருப்பதாகும்.
இராமசாமி கோவில்
கும்பகோணத்திலுள்ள மற்றொரு புகழ்மிக்க விஷ்ணு
கோவில் இராமசாமி கோவிலாகும். இக்கோவில் தஞ்சையை
ஆண்ட நாயக்கர் மன்னர் இரகுநாதரால் (1614-1640)
கட்டப்பட்டதாகும். கருவறையில் இராமர், சீதை, இலக்குமணர்,
பரதர், சத்துருக்கனர், ஆஞ்சநேயர் ஆகிய திருஉருவங்கள்
பொலிவுடன் காட்சியளிக்கின்றன.
இராமசாமி கோவிலின் மகா மண்டபம் ஒரு கலைக்
கருவூலமாகும். இங்கு ஒரே கல்லினாலான அற்புத
|