பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்391

காண்போர் யாவரையும் கவரும் தன்மை உள்ளது.
இம்மண்டபத்தின் மேற்கிலுள்ள இருபக்கங்களில்
இராமகிருஷ்ணரின் உருவப்படமும். அன்னை
சாரதாதேவியின் உருவப்படமும் உள்ளன.

சபா மண்டபத்திற்கு அருகில் தியான மண்டபம்
உள்ளது. தியானத்தில் அமருவதற்கான சூழ்நிலை
இம்மண்டபத்தில் உருவாக்கப் பட்டுள்ளது. ஆழ்ந்த
தியானத்தினால் ஏற்படும் பயன்களை, இத்தியான மண்டபத்தில்
ஒருவர் அறியலாம்.

இந்தியாவின் பெருமைக்கு உழைத்த சுவாமி
விவேகானந்தரின் நினைவாகக் கன்னியாகுமரியில் எழுப்பப்பட்டுள்ள
பாறை மண்டபம், தலைசிறந்த ஒரு தேசியச் சின்னமாகும்.