இராஜகிரி மலைக்கோட்டைக்குத் தெற்கில்
சந்த்ரயன்
துர்க்கம் மலைக்கோட்டை உள்ளது.
தமிழ்நாட்டில் செஞ்சி
கோட்டையைப்போல் சிறப்பு
மிக்கது வேறு எதுவும் இல்லை எனலாம். இக்கோட்டை நமது
பண்பாட்டை அறிய உதவும் சிறந்த தொல்பொருள் சின்னமாகும்.
செஞ்சியிலிருந்து 16 கி.மீ. தொலைவில்
தளவனூர் என்ற
இடம் உள்ளது. இங்குள்ள பஞ்ச பாண்டவர் மலையின் தென்
பகுதியில் பல்லவர்காலக் குடைவரைக்கோவில் ஒன்று உள்ளது.
முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் காலத்தில் (கி.பி. 600-630)
இக்கோவில் குடையப்பெற்றதாக அறியப்படுகிறது.
கல்வெட்டுகளிலிருந்து இக்குடைவரைக் கோவில் சத்ரு
மல்லீஸ்வரர் என்ற சிவாலயமாக எழுப்பப்பட்டதாக
அறியப்படுகிறது.
தளவனூரிலிருந்து 10 கி.மீ. தொலைவில்
மண்டகப்பட்டு
குகைக்கோயில் உள்ளது. இக்குகைக் கோவிலை அமைத்தவர்
விசித்திர சித்தனான மகேந்திரவர்ம பல்லவர் ஆவார்.
|