(1758). பிரெஞ்சுப் படைகள் இக்கோட்டையின் பெரும்பகுதியை
அழித்தன. பிரெஞ்சுக்காரர்களின் வீழ்ச்சிக்குப் பின்
இக்கோட்டைப் பகுதியை ஆங்கிலேயர்கள் மீண்டும் பெற்று
புதுப்பித்துக் கட்டினர் (1761). ஆனால், இதன்பின் இக்கோட்டை
இதன் இராணுவ முக்கியத்துவத்தை இழந்தது வரலாற்றுச் சிறப்புமிக்க
புனித டேவிட் கோட்டையின் எஞ்சியப் பகுதிகளை இன்று நாம்
காணலாம். இந்தியாவிலுள்ள சிறு துறைமுகங்களில் கடலூர்
ஒன்றாகும்.
புதுச்சேரி
கடலூரிலிருந்து 22 கி.மீ. தொலைவில் புதுச்சேரி உள்ளது.
புதுச்சேரி, காரைக்கால், மாஹி, ஏனாம் ஆகிய பிரதேசங்கள்
இந்திய யூனியனின் நேரடி ஆட்சிக்குட்பட்டுள்ளன. இவற்றின்
தலைமையிடம் புதுச்சேரி நகர் ஆகும். இப்பிரதேசங்கள்
பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்தன. 1954ஆம்
ஆண்டு இவை இந்திய அரசுடன் இணைந்தன.
சென்னை நகரின் வளர்ச்சிக்கு எவ்வாறு ஆங்கிலேயர்கள்
காரணமாக இருந்தார்களோ, அது போல் புதுச்சேரியின்
வளர்ச்சிக்குப் பிரெஞ்சுக்காரர்கள் காரணமாக இருந்தனர்.
பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி கி.பி. 1664இல்
தோற்றுவிக்கப்பட்டது. இக்கம்பெனியார் செஞ்சியிலிருந்த
பீஜப்பூர் சுல்தானின் ஆளுநரிடமிருந்து கி.பி. 1674இல் இன்றைய
புதுச்சேரிப் பகுதியைத் தங்களுக்கு உரிமையாகப் பெற்றனர்.
பிராங்கோ மார்டின் என்பவர் இங்கு ஒரு கோட்டையைக்
கட்டினார். மீனவர் வாழும் ஒரு கிராமமாக இருந்த பகுதி,
பிரெஞ்சுக்காரர்களின் வருகையினால் ஒரு சிறந்த நகரமாயிற்று.
இந்தியாவில் பிரெஞ்சுக்காரர் அதிகாரத்தை முதன்முதல்
நிறுவியவர் பிராங்கோ மார்டின் எனலாம்.
பிராங்கோ மார்டினை அடுத்து டூமாஸ் என்பவர்
புதுச்சேரியின் பிரெஞ்சு ஆளுநராக வந்தார். புதுச்சேரியை
ஆட்சிபுரிந்த பிரெஞ்சு ஆளுநர்களில் புகழ்மிக்கவர் டியூப்ளே
(1697-1764) ஆவார். இவர் கி.பி. 1742முதல் 1754வரை
புதுச்சேரியின் ஆளுநராக இருந்தார். இவர் இந்தியாவில்
|