| சொல் தமிழ் இலக்கியத்தில் ‘விளையாட்டு’ என்னும் பொருளில் வழங்கி வந்துள்ளது. எனவே, இதற்கு இராசி என்று பொருள் கொள்ளல் பொருத்தமாகாது. சங்க இலக்கியத்துக்கு முற்பட்டது தொல்காப்பியம் என்பதற்கு மேலும் சில சான்றுகளைக் காட்டலாம். சங்கப் பாட்டுகளில் இடம் பெற்றுள்ள சமயக் குறிப்புகள் பல தொல்காப்பியத்தில் காணப்படவில்லை. ‘மாயோன், சேயோன், வருணன், வேந்தன் என்னும் நானிலத் தெய்வங்களுடன் கொற்றவை என்ற பெண் தெய்வத்தையும் தமிழர் வழிபட்டனரெனத் தொல்காப்பியர் கூறுகின்றார்’.33 ஆனால், கடைச் சங்ககாலத்தில் ‘காரியுண்டிக்கடவுள்’ என்றும், ‘மாற்றருங் கணிச்சி மணிமிடற்றோன்’ என்றும், ‘முக்கண்ணான்’ என்றும் கடவுளை உருவத் திருமேனியில் வழிபட்டு வந்ததைக் காண்கிறோம். திருமால் வழிபாட்டில் ‘செங்கட்காரி’ (வாசுதேவன்), ‘கருங்கண் வெள்ளை’ (சங்கருடணன்), ‘பொன்கண் பச்சை’ (பிரத்தியும்நன்), ‘பைங்கண்மால்’ (அநிருத்தன்) என்னும் பெயர்கள் பரிபாடலில் வழங்குகின்றன. கடைச்சங்க காலத்தில் சிவன் வழிபாடும் பலதேவன் வழிபாடும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அவர்களுடன் திருமாலையும் முருகனையும் தமிழர் அப்போது வழிபடலாயினர். காமன் வழிபாடும் சிறப்புற்று விளங்கிற்று. ஆனால், தொல்காப்பியத்தில் காமனைப்பற்றிய குறிப்பே காணப்படவில்லை. மற்றும், அகத்திணையைப்பற்றிய செய்யுள்கள் யாவும் பரிபாடல், கலிப்பா ஆகிய பாவினங்களில் அமைய வேண்டுமெனத் தொல்காப்பியர் விதித்துள்ளார். ஆனால், கடைச்சங்க காலத்தில் அகப்பொருளை அகவற்பாவில் பாடியுள்ளனர். கருத்துப்பெருக்கம், மக்களின் வாழ்க்கைவகை ஏற்றம், அவர்களுடைய பண்பாடு, நாகரிகம் முதலியவற்றின் வளர்ச்சி ஆகியவற்றுக்கு ஏற்றவாறு மொழி வளர்ச்சியும் ஓங்கிவரும். அந் நிலையில் இலக்கணப் படைப்புகள் இலக்கண விதிகளையும் கடந்து செல்ல வேண்டியிருக்கும். இக் காரணத்தால் வளர்ந்து வந்த தமிழிலக்கியமானது தொல்காப்பியம் வேய்ந்த இலக்கண நெறியினின்றும் ஆங்காங்கு வழுவலாயிற்று. இவ் வழுவல்களுக்கும் இலக்கண அமைதி கண்டு புது விதிகளை நிறுவிக் கொடுத்தனர் பிற்கால இலக்கண ஆசிரியர்கள். தொல்காப்பியர் இடைச்சங்க காலத்தில் வாழ்ந்தவராயின் இடைச்சங்க காலம் எஃது என்னும் கேள்வி எழுகின்றது. தொல்காப்பியர் 33. தொல்.பொருள், புறத்திணை. 4 |