| தமிழில் சொற்கள் உண்டு. வெள்ளம், ஆம்பல், தாமரை என்பன அவ்வெண்ணுப் பெயர்களுள் சில.177 நிறுத்தலளவை, முகத்தலளவை, நீட்டலளவை ஆகியவற்றுக்கும் சங்க இலக்கியத்தில் சொற்கள் உண்டு. தமிழகத்தின் மிகச் சிறந்த தொழிலாக விளங்கியது உழவுதான். சங்க இலக்கியத்தில் இதற்கு அளவற்ற சிறப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு பெண் யானை படுக்கும் அளவுள்ள இடத்தில் ஏழு ஆண் யானைகட்கு அளிக்கப்படும் தீனியளவு உணவுப் பண்டம் உற்பத்தியாகக்கூடிய செழிப்பான நாட்டை உடையவன் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்று ஆவூர் மூலங்கிழார் பாராட்டிப் பரவுகின்றார்.178 உழவு நிலம் மிகவும் செழிப்பாய் இருந்ததால் உணவுப் பண்டங்களின் விளைச்சல் வரம்பின்றிக் காணப்பட்டது. நெல்லும் கழைக் கரும்பும், தென்னையும் வாழையும், மஞ்சளும் இஞ்சியும், பருத்தியும் தமிழகமெங்கணும் பயிராயின. நிலத்தை உழுவதும், எருவிடுவதும், நாற்று நடுவதும், தண்ணீர் கட்டுவதும், களை எடுப்பதும், பயிரைக் காவல் காப்பதும் உழவுப் பணிகளுள் சிலவாகும்.179 விருந்தோம்பல் பழந்தமிழரின் மிகச் சிறந்ததொரு பண்பாடாகும். உறவினரும் நண்பருமின்றிப் புதிதாக வருபவர்கட்கு விருந்து என்று பெயர்.180 உண்பதற்குக் கலமும்,181 வாழையிலையும்,182 தேக்கிலையும்183 பயன்பட்டன. விளையாட்டுகள் குழந்தைகள் தெருவில் மணல்வீடு கட்டி விளையாடுவர்; முச்சக்கரத் தேர் உருட்டுவர்; பவழப் பலகைமேல் இரு யானைப் பொம்மைகள் ஒன்று மற்றொன்றைக் குத்துவதைப்போலச் செதுக்கிப் பொருத்தி வைத்து அவர்கள் விளையாடுவார்கள்.184 குழந்தைகள் கிலுகிலுப்பை யாட்டி மகிழ்வார்கள்.185 குழந்தைகட்கு அம்புலி காட்டுவதும் முத்தங்கொடுப்பதுமுண்டு.186 சிறுவர் மடுவில் ‘துடும்’ எனக் குதித்து மூழ்கி மண்ணை எடுத்து வந்து கரைமேல் நின்ற சிறுமியர்க்கு வியப்பூட்டுவார்கள்.187 177. தொல். எழுத். 393. 178. புறம். 40 : 0-11. 179. குறள், 038. 180. பட்டினப். 262. 181. புறம் 160. 235. 384. 182. புறம். 168. 183. பெரும்பாண். 104; அகம்.107: 10 184. பெரும்பாண். 249; குறுந். 61: 1-3; ஐங்குறு. 66; 2-3; கலித்.80, 86. 185. சிறுபாண். 164 186. புறம். 160. 187. புறம். 243. |