பக்கம் எண் :

மேடைப் பேச்சு11

சேக்கிழார்    குறித்துப் போந்தார். இன்னும் , சோழநாட்டின் ஆதித்
தலைநகராகிய  திருவாரூருக்கு அருகே  பேரெயில்  என்ற பெயருடைய
ஊர்  ஒன்று  உள்ளது.  அது  தேவாரப்பாடல்  பெற்ற பழம்பதி. சோழ
மன்னர்கள் அவ்விடத்தில்  பெருங்கோட்டை  கட்டியிருந்தார்கள் என்று
தோற்றுகிறது. அவ்வூர் ஓகைப்பேரையூர் எனவும் வழங்கும்.

கோட்டையின்     பல கூறுகளும் உறுப்புக்களும்  புறப்பாடல்களால்
புலனாகின்றன.   கோட்டையின்  சிறந்த   அங்கம்   மதில்.  மதிலைக்
குறிக்கும்  தமிழ்ச்  சொற்கள்  பலவாகும்.   அவற்றுள்  ஆரை, எயில்,
இஞ்சி,   நொச்சி,  புரிசை  என்பன.   புறநானூற்றில்   வழங்குகின்றன.
மதில்களில் செப்புத்  தகடுகளைச்  செறித்துத் திண்மை  செய்யும் முறை
முற்காலத்தில் கையாளப்  பட்டதாகத் தெரிகின்றது,  இலங்கை மாநகரின்
திண்ணிய   மதில்களின்  திறத்தினையும்,   அம்  மதிலாற்  சூழப்பட்ட
நகரத்தின்   செழுமையையும்,   ‘செம்பிட்டுச்  செய்த இஞ்சித் திருநகர்’
என்று     கூறிப்போந்தார்      கம்பர்.    தென்பாண்டி    நாடாகிய
திருநெல்வேலியில்,  பாண்டிய  மன்னர்    கட்டியிருந்த  கோட்டையின்
குறிகள்,  பல  இடங்களில்  உள்ளன.   அவற்றுள்  ஒன்று  பொருளை
ஆற்றின்  கரையில்   அமைந்த   செப்பறையாகும்.  செப்பறை என்பது
செம்பினால் செய்த  அறை  என்ற  பொருளைத் தரும். செப்பறை என்ற
இடத்தில்   இக்காலத்தில்   குடிபடை  ஒன்றுமில்லை.  அழகிய கூத்தர்
கோவில் ஒன்றே  காணப்படுகின்றது.  ஆயினும், அக்கோவிலைச் சுற்றிச்
சிதைந்த   மதில்களும்,  மேடுகளும்   உண்டு.   செப்பறைக்கு  எதிரே,
ஆற்றின்  மறுகரையில்,  மணற்படை  வீடு என்ற ஊர்  அமைந்துள்ளது.
படை வீடு என்பது அரசனது படை