பக்கம் எண் :

மொழியும் நெறியும்185

ஒன்றாகிய      மணிமேகலை,    அதன்    பெருமைக்குச்   சான்றாக
நிற்கின்றது.  வீரசோழியம்   என்னும்   இலக்கண  நூல் அம் மதத்தைச்
சார்ந்தவரது  புலமைத்  திறத்தை  விளக்கி  நிற்கின்றது, போதியின் கீழ்
மாதவம்  புரிந்த  புத்தரின்  ஞாபகச்  சின்னமாக  அரசமரம் சிறப்புற்று
விளங்குகின்றது.