பக்கம் எண் :

இருமையில் ஒருமை231

35. இரு மலையும் தமிழ் மலையே

தெற்குமலைச்      சாரலில் வசந்த காலத்  தென்றல்  இனிமையாகத்
தவழ்ந்தது.  அவ்   வின்பத்தை  நுகர்ந்த குன்றக் குறவர் வேட்டையாட
எழுந்தனர்.     குற்றாலத்திலும்     பொதிய    மலையிலும்   வாழ்ந்த
குறவஞ்சியர்  இருவர்   குறி   சொல்லிப்  பிழைப்பதற்காக  மதுரையை
நோக்கிப்  நடந்தனர்.   இளங்காற்று  வீசிய திருநெல்வேலிச் சாலையில்
ஒருவரை ஒருவர் கண்டு மகிழ்ந்தனர் அவ் வஞ்சியர்.

‘விண்ணானக்     குறத்தி’  என்று  பெயர்  பெற்றிருந்த  குற்றாலக்
குறவஞ்சி தன் மலையின்  பெருமையை  விளம்பத் தொடங்கினாள்.  ‘ஏ!
பொதிய  மலையம்மே!  என் மலையின் பெருமையைக் கொஞ்சம் கேள்!
அழகான  அருவி  உடையது என் மலையே! சஞ்சீவி முதலான மூலிகை
வளரும்  மலை   என்   மலையே!  சித்தரும் முனிவரும் எப்பொழுதும்
வாழும்  மலை  என்  மலையே!  இதனாலேதான் ‘கயிலைக்கு ஒப்பானது
குற்றாலம்’  என்று   கவிகள்   பாடியுள்ளார்  என்று  சொல்லிப் பாடத்
தொடங்கினாள்:

“தேனருவித் திரையெழும்பி வானின்வழி ஒழுகும்  
செங்கதிரோன் தேர்க்காலும் பரிக்காலும் வழுகும்