பக்கம் எண் :

238தமிழ் இன்பம்

VIII. பாரதியார் பாட்டின்பம்

36, செந்தமிழ் நாடு

இவ்வுலகில்     முன்னணியில்  நிற்கும்  நன்னாடுகளெல்லாம் தமது
தாய்மொழியைத்   தலைக்கொண்டு  போற்றுகின்றன. தமிழ்நாட்டில்  சில
காலத்திற்கு  முன்னர்   அந்நிய   மொழிகளில்  பேசுவதும் எழுதுவதும்
அறிவுடைமைக்கு    அழகென்றும்,    தாய்மொழியைப்   புறக்கணிப்பது
தவறன்றென்றும்  அறிவாளர்  கருதுவாராயினார். ஆயினும், இப்பொழுது
அத்தகைய    கொள்கைகள்    அகன்று   ஒழிய,  ஆர்வம்   நிறைந்த
தமிழ்மக்கள் தமிழத்தாயை ஆதரிக்க தலைப்பட்டுள்ளனர்.

தமிழ்மொழியின்      நயமறிந்த  கவிஞரும் அறிஞரும் அம் மொழி
பயிலும்  தமிழகத்தை  அன்பு  ததும்பும்  இன்ப மொழிகளாற் போற்றும்
அழகு  எல்லை   யற்ற   இன்பம்  தருவதாகும்.  தமிழ் மணங் கமழும்
திருநாட்டில்   அமைந்து   மலையும்  ஆறும் தமிழ்க் கவிகள் மனத்தில்
தமிழ்மயமாகவே  விளங்கித்  தோன்றுகின்றன.  ‘என்றுமுள தென்தமிழை
இயம்பி இசைகொண்ட’