|
New Page 1
மொழியறிஞர். தமிழ்ச் செய்தித்தாளாசிரியரோ
பெரும்பாலும் இலக்கண விலக்கியப் பயிற்சியில்லாதவர்; புலவர் தேர்வு தேறாதவர். ஆயினும்,
புலவர்வழித் தாம் நிற்காது தம்வழிப் புலவர் நிற்க விரும்புகின்றனர்.
தூய தமிழ்ச்சொற்க ளிருப்பவும்,
அவற்றுக்குப் பதிலாகப் பிற சொற்களை யாண்டு கலவைநடையில் எழுதி வருவதே, தமிழ்ச் செய்தித்
தாளாசிரியர் வழக்கமா யிருந்துவருகின்றது. இலக்கிய அறிவும் மொழிப் பற்றும் இல்லாதவர் தமிழுக்கு
எங்ஙனம் அதிகாரிகளாக முடியும்?
ஓரிரு புலவர்க்குத் தமிழெழுத்து மாற்ற அதிகாரமின்மை
இனி, பெரும் பட்டமும் பெரும்
பதவியும் பெருஞ் சம்பளமும் பெற்றிருத்தல் காரணமாக, இரண்டொரு புலவர் மட்டும் தமிழுக்கு முழு அதிகாரிகளாகிவிடார்.
கலியாணசுந்தரனார், பண்டிதமணியார், பாரதியார் முதலிய பெரும்புலவரையும் பிறமொழி யறிஞரையும்
கேட்டே, தமிழ் எழுத்தில் மாற்றஞ்செய்தல் வேண்டும்.
தமிழெழுத்து மாற்றும் முழுவதிகாரமும்
தமக்குண்டென்று ஓரிரு புலவர் தருக்குவரேல், அவர் பல்கலைக்கழகத் தமிழகராதியில் தமிழ் வடமொழி
வழித்தாகக் காட்டப்பட்டிருப்பதை ஒட்டியோ வெட்டியோ பேசித் தம் கருத்தை நாட்டித் தம் அதிகாரத்தைக்
காட்டுக.
வினையின் இயல்பையும் பின்விளைவையும்
சிறிதும் கருதாது, ஒரு குழுவில் இடம் பெற்றதே போதுமென்று மகிழ்வது, புலமக்களும் பொது மக்களுமாகிய
இருசார் தமிழர்க்கும் இக்காலத்தியல்பா யுள்ளது.
தமிழெழுத்தின் சீர்மையும் பிறமொழி யெழுத்துகளின் குறைபாடும்
இதுபோது வழக்கிலுள்ள தமிழ் அரிவரியைப்
பிறமொழி யரிவரிகளோடு ஒப்புநோக்கினால்தான், முன்னதின் சீர்மை விளங்கும்.
வடமொழி யரிவரியில்,
gh,
bh; ங, ட;
bh, m ஆகிய இவ் வீரெழுத்துகள் சிறிதே தம்முள் வேற்றுமையுடையன.
kh என்னும் எழுத்தும்
ஸ்வ என்னும் கூட்டெழுத்தும், 'ரவ' போலும் தோன்றும். முன்னும் பின்னும் கீழும் சேர்த்தெழுதும்
கூட்டெழுத்துகள் (சம்யுக்தாக்ஷரம்) 160-க்கு மேலுண்டு. இதனால் மிக நுணுக்கியும் வரிநெருக்கியும்
எழுதமுடியாது. கூட்டெழுத்துகள் பலவற்றிற்குத் தனி அச்சுருக்கள் (types) வேண்டும். உயிர்மெய் வரிகள்
(33 x 12) 462.
வடமொழி யரிவரியையே கொண்ட
இந்தி யெழுத்துகளில் இக் குறைபாட்டோடு இடை கடை வரும் அகர வூமையெழுத்துகளும்
(Silent
Letters) உண்டு. உயிர்மெய் வரிகள் (33 x 12) 396.
தெலுங்கரிவரியில்,
ஒ, bh;
ப, வ; ந, ஸ ஆகிய இவ்வீரெழுத்துகள் தம்முள் மிகச்சிறிதே வேறுபட்டு மயக்கத்திற்கிடமாவன.
முன்னும் பின்னுங்
|