New Page 1
|
உயர்திணை யென்மனார் மக்கட்
சுட்டே |
என்று சொல்லதிகாரத் தொடக்கத்திலும்,
|
கைக்கிளை முதலா............எழுதிணை
யென்ப |
| |
|
அகத்திணை மருங்கின் அரில்தப
வுணர்ந்தோர் |
| |
|
................ |
| |
|
திறப்படக் கிளப்பின்'' |
| |
|
நல்லிசைப் புலவர் செய்யு ளுறுப்பென |
| |
|
வல்லிதிற் கூறி வகுத்துரைத் தனரே.'' |
| |
|
மாற்றருஞ் சிறப்பின் மரபியல்
கிளப்பின் |
என்று முறையே பொருளதிகார அகத்திணையியல்
புறத்திணையியல் செய்யுளியல் மரபியல் தொடக்கத்திலும், கூறியதோடு, நூல் நெடுகலும் "என்மனார்
புலவர்", "என மொழிப", "வரையார்", "என்ப உணருமோரே", "என்ப சிறந்திசி னோரே", "என்மனார்
புலமை யோரே", "எனமொழிப உணர்ந்திசி னோரே", "கிளப்ப", "என்றிசி னோரே" என்றும் பிறவாறும்
அடிக்கடி இடையிடை தொல்காப்பியர் கூறிச் செல்வதும்; தொல்காப்பியம் தொகுப்பு நூலேயன்றிப்
புதிய வகுப்பு நூலன்று என்பதைத் தெளிவாகக் காட்டும்.
மேலும், தொல்காப்பியம் நன்னூலும்
அஷ்டாத்யாயீ என்னும் பாணினீயமும் போல எழுத்துஞ் சொல்லும் மட்டுங் கூறாது, தமிழுக்கே சிறப்பாகவுள்ள
யாப்பணி யுட்கொண்ட தொல்வரவுப் பொருளிலக்கணமுங் கூறுதலின், அதனாலும் அது தொல்காப்பியர்
புதுப்படைப்பன்றென்பது வெள்ளிடை மலையாம். வடசொற் கலப்பும் சில ஆரியக் கொள்கைகளும் பற்றிய
கூற்றுகளே தொல்காப்பியரின் புதுச் சேர்க்கையாகும். இதை யறியாத சில தமிழாசிரியர், தொல்காப்பியர்
தாமே தமிழ் எழுத்திலக்கணத்தைத் திறம்பட வகுத்துக் கூறியதாக அவரைப் போற்றியுரைத்துத் தம்
ஆராய்ச்சி யின்மையைப் புலப்படுத்துவர்.
பொருளிலக்கண மரபு குமரிநிலைத்
தமிழரின் திணைநிலை வாழ்க்கைச் செய்திகளைப் போற்றிக் காத்துவருவதால், அவ் வகையிலேயே தொல்காப்பியம்
பழந்தமிழ் வரலாற்றாராய்ச்சிக்குப் பயன்படுவதாகின்றது. இங்ஙனமே, புறநானூறு, கலித்தொகை, சிலப்பதிகாரம்,
மணிமேகலை, புறப்பொருள் வெண்பாமாலை முதலிய சில பாத்தொகைகளிலும் வனப்புகளிலும் இலக்கண நூல்களிலும்
உள்ள குறிப்புகளும் பயன்படுகின்றன.
ஆராய்ச்சி யென்பது எல்லாருஞ் செய்யக்கூடிய
எளிசெயலன்று. மதிநுட்பம், பரந்தகல்வி, நடுநிலை, அஞ்சாமை, தன்னலமின்மை, மெய்யறியவா என்னும்
ஆறும் ஆராய்ச்சியாளர்க்கு இன்றியமையாத பண்புகளாகும்.
|