|
இகரச
இகரச்சுட்டு வழங்கத் தலைப்பட்டு,
அன்றிருந்து அம்முறையே தொடர்ந்து வருகின்றது. (பெண்மகள் என்னும் மாறோக்கத்து வழக்கும் பெட்டைப்
பையன் என்னும் வடார்க்காட்டு வழக்கும், ஆண்பால் பெண்பால் விகுதியேற்படாத முந்துகால மொழிநிலையை
ஊகித்துணர வுதவும்.)
|
எ-டு : |
விறகுவெட்டி (ஆண்பால்)
|
| |
மண்வெட்டி (ஒன்றன்பால்) |
| |
கயற்கண்ணி (பெண்பால்) |
| |
காடைக்கண்ணி (ஒன்றன்பால்) |
ஆகவே, இகர விகுதி ஒருமை விகுதியேயன்றிப்
பெண்பால் விகுதியன்று. அது ஒரு குறித்த சொல்லில் மேற்கூறிய முப்பாலுள் ஒன்றை உணர்த்துமே யன்றித்
தனித்த நிலையில் உணர்த்தாது. கண்ணன் என்னும் ஆண்பாற் சொற்கு நேரான பெண்பாற் சொல், கண்ணள்
என்பதே யன்றிக் கண்ணி என்பதன்று. கண்ணான் என்பது கண்ணன் என்று குறுகுவது போலக் கண்ணாள் என்பதும்
கண்ணள் என்று குறுகும். வந்தான் என்பதற்கு வந்தாள் என்பது எங்ஙனம் பெண்பாலோ, அங்ஙனமே கண்ணன்
என்பதற்கும் கண்ணள் என்பதே நேரான பெண்பாலாம். கண்ணாள் அல்லது கண்ணள் என்று சொல்வதற்குப்
பதிலாகக் கண்ணி என்று சொல்வது வழக்கூன்றிவிட்டதனால், இகர விகுதியைப் பெண்பாற் சிறப்பு
விகுதியென்று பலர் மயங்க நேர்ந்துவிட்டது. அவ் விகுதி பெண்பால் விகுதியாயிருக்கக் கூடியதே யன்றிப்
பெண்பாலுக்கே யுரிய விகுதியன்று.
'இ'வ் விகுதி 'அள்' விகுதியைவிடப்
பலுக்குவதற்கு (உச்சரிப்பதற்கு) எளிதாயும் இன்னோசையுள்ளதாயு மிருத்தலே, அது பெருவழக்காய் வழங்குவதற்குக்
காரணமாகும். கண்ணள் கண்ணி என்னும் இரு சொற்களையும் பலுக்கிக் காண்க. இக் காரணம் பற்றியே,
தாயைக் குறிக்கும் சொற்களுட் சில `அள்' விகுதியைவிட்டு `இ'வ் விகுதியை ஏற்றுள்ளன.
|
எ-டு
: ஆண்பால் (தந்தை) |
பெண்பால் (தாய்) |
| |
|
|
அத்தன்
|
அத்தி |
|
அச்சன் |
அச்சி |
அத்தி என்பதொடு தொடர்புள்ள அத்தை
என்னும் பெயர், அத்தனின் (தந்தையின்) உடன்பிறந்தாளைக் குறிக்கும். அத்தன் என்பதன் திரிபே
அச்சன் என்பது. அச்சன் என்னும் ஆண்பாற்பெயர் சேரநாடான மலையாள நாட்டிலும், அச்சி என்னும்
பெண்பாற் பெயர் பாண்டிநாட்டிலும், வழங்கி வருகின்றன.
|
அச்சி = அக்கை (பாண்டிநாட்டு
வழக்கு) |
| |
|
அக்கை தாய் போன்றவளாதலால் அச்சி
எனப்பட்டாள். |
| |
|
ஒ.நோ : தம் + அவ்வை (தாய்) = தவ்வை = தமக்கை |
|