|
கூ
கூடிய பகரம் ஒன்றெனவே ஏனை யுயிர்களோடு கூடிய பகரம் பன்மொழிக்கு ஈறாய்ப்
பல பொருள் தருமென்றா ராயிற்று. மறந்தப துப்பா என எச்சமாயும், நம்பி செம்பூ பே பெதும்பை
எனப் பெயராயும், போ என ஏவலாயும் வரும். இவற்றைப் பிற சொற்களோடும் ஒட்டுக. ஏனை ஈகார
பகரம் இடக்கராய் வழங்கும்."
இவ் வுரையால், தபு என்பது தன்வினையா யிருக்குங்கால் முதலெழுத்தில் (தகரத்தில்)
அழுத்தமென்றும், பிறவினையாயிருக்குங்கால் இரண்டாம் அல்லது இறுதியெழுத்தில் (புகரத்தில்) அழுத்தம்
என்றும், அறியப்படும். பிறவினை நிலையில் ஈரெழுத்தும் (அதாவது சொல் முழுதும்) எடுத்தொலிப்பின்,
அது சினத்தாலெழுந்த உச்ச அலகுநிலையென அறிக.
இனி, ஒட்டு, கட்டு, தட்டு, முட்டு; ஓட்டு, காட்டு, பூட்டு, மூட்டு முதலிய
குற்றுகர வீற்றுச் சொற்கள், ஏவலாயிருக்குங்கால் ஈற்றிலும் சிறிது அழுத்தம் பெறுமென்றும், முதனிலைத்
தொழிற் பெயராயிருக்குங்கால் அதனைப் பெறாதென்றும் அறிதல் வேண்டும்.
ஆயின், "காது என்னுஞ் சொல்லை இதழ் குவித்துச் சொல்லுமிடத்து
முற்றியலுகரமாம். அதற்குப் பொருள் கொல் என்பது. அதனை இதழ் குவியாமற் சொல்லுமிடத்துக்
குற்றியலுகரமாம். அதற்குப் பொருள் காது என்னும் உறுப்பு. முருக்கு என்னுஞ்சொல் இதழ் குவித்துச்
சொல்லு மிடத்து அடி எனவும், இதழ் குவியாமற் சொல்லுமிடத்து முருக்காகிய மரம் எனவும் பொருள்
தரும். பிறவும் இவ்வாறே பொருள் வேற்றுமை உடையவாதல் அறிந்துகொள்க. குற்றியலுகரத்துக்கும்
முற்றியலுகரத்துக்கு முள்ள பொருள் வேற்றுமை இவையே" என்று திரு. சி. கணேசையர் தொல்காப்பிய
இரண்டாம் நூற்பாவிற்கு அடிக்குறிப்பு எழுதியிருப்பது பொருந்தாது.
என்னை?
|
"ஈரெழுத் தொருமொழி உயிர்த்தொடர் இடைத்தொடர் |
|
|
ஆய்தத் தொடர்மொழி வன்றொடர் மென்றொடர் |
|
|
ஆயிரு மூன்றே உகரம் குறுகிடன்" |
(தொல்.
406) |
என்றார் தொல்காப்பியராதலின்.
அறுவகைத் தொடரின் ஈற்றில் நிற்கும் உகரமெல்லாம் குற்றியலுகரமே யென்றும்,
அவை எக்காரணத்தையிட்டும் ஒருபோதும் இதழ்குவித் தொலியாவென்றும், திட்டமா யறிந்து கொள்க.
ஒலியழுத்தம் வேறு; இதழ் குவிவு வேறு.
இனி,
முற்றியலுகர, குற்றியலுகரங்கள் பொருள் வேறுபடுவதும், அளவு, அளபு; உருவு, உருபு முதலிய ஒருசில
சொல்லிணைகளிடத்தே யென்க. உருவு என்பதன் ஈற்றிலுள்ளது முற்றியலுகரம்; அச் சொற்பொருள்
வடிவம் என்பது. உருபு என்பதன் ஈற்றிலுள்ளது குற்றியலுகரம்; அச் சொற்பொருள் வேற்றுமைவடிவம் என்பது.
இங்ஙனமே, அளவு என்பதன்
|