|
தம
தமிழ் தானே தோன்றிய
உலக முதன்மொழியாதலால், அதன் எழுத்து, படவெழுத்து
(Picture writing), கருத்தெழுத்து
(Hieroglyph or Ideograph), அசையெழுத்து
(Syllabary), ஒலியெழுத்து
(Phonetic Alphabet) என முறையே நானிலைகளை யடைத்திருத்தல் வேண்டும். இன்றுள்ளது நாலாம் நிலையே.
எழுதும் வினை எழுதப்படும் கருவிக்கேற்ப
வெவ்வேறு சொல்லாற் குறிக்கப்பெறும். கையினால் மணலிலும், மையினால் துணியிலும் சுவரிலும் எழுத்தாணியால்
ஓலையிலும் ஒவ்வொரு வரிவடிவும் ஒரே தொடர்ச்சியாகக் கோடிழுத்து வரையப்படுவதே எழுதுதல் எனப்படும்.
கல்லிலும், தகட்டிலும் உளிகொண்டு புள்ளி புள்ளியாக அல்லது குறுங்குறுங் கோடாகப் பொளித்து
வரைவது வெட்டுதல், செதுக்குதல், பொறித்தல் என்னுஞ் சொற்களாற் குறிக்கப்பெறும்.
இக்காலத்துத் தாள்
(Paper) அக்காலத்தில் இல்லை. ஓலையும் தாழைமடலும் மரப் பட்டையும் துணியும் தோலும்தான் தாள்போற்
பயன்பட்டன.
போர்க்களத்திற் பொருதுபட்ட சிறந்த
மறவனின் உருவமும் பெயரும் பீடு பொறித்த கல் நட்டு, அதைத் தெய்வமாகத் தொழுவது பண்டைத் தமிழர்
வழக்கம் என்பது, "நடுகல்" என்னும் வஞ்சித்திணைத் துறையால் அறியப்படும்.
|
காட்சி கால்கோள் நீர்ப்படை
நடுகல்
|
(தொல்
1006) |
| |
|
|
நடுகல் அல்லது தெய்வமு
மில்லை |
(புறம்) |
இங்குத் தெய்வம் என்றது பொதுமக்கள்
வணங்கும் சிறுதெய்வத்தை. கண்ணகிபோலும் கற்பரசிக்குப் படிமஞ் சமைத்துப் பெயரும் பீடும்
பொறித்து வழிபடுவதும் பண்டை வழக்கமே.
மேற்கூறியவற்றால் செய்திகளை எழுதுவதும்
பொறிப்பதும் பண்டைத் தமிழ்நாட்டு வழக்கிலிருந்தமை அறியப்படும். இவ் விரு வகையுள் முன்னதே
முந்தியதும் இயற்கையுமாகு மென்பதும், உய்த் துணர்வாற் புலனாகும்.
இன்றுள்ள தமிழ்நூல்களுள் காலத்தால்
முந்தியது தொல்காப்பியம். அதன் காலம் கி.மு.ஏழாம் நூற்றாண்டென்பது அகச்சான்றும்,
புறச்சான்றும் கொண்டு ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ளது. அந் நூலில், நன்னூலார் கூறும்,
|
எண்பெயர் முறைபிறப் புருவம் மாத்திரை |
|
|
முதலீ றிடைநிலை போலி யென்றா |
|
|
பதம்புணர் பெனப்பன்
னிருபாற்று |
(நள். 57) |
எழுத்திலக்கணங்களும் கூறப்பட்டுள.
ஆறுறுப்புகளும் இரண்டும் இரண்டிற்கு மேற்பட்ட பலவுமாகக் கூடியமையும் பகுசொல்லிலக்கணம்,
|