பக்கம் எண் :

102ஒப்பியன் மொழிநூல்

பட்டவை, வடக்கில் சமஸ்கிருதமும் தெற்கில் தமிழுமாக இரண்டேயென்பது, வடமொழி தென்மொழியென்னும் அவற்றின் பெயர்களாலேயே அறியப்படும். இன்றும், தென் னாட்டு மொழிகளை யெல்லாம் தமிழுக்குள்ளும் வடநாட்டு மொழிகளை யெல்லாம் சமஸ்கிருதத்திற்குள்ளும் அடக்கி விடலாம். திராவிடக் குடும்பம் முழுதும் தமிழுக்குள் அடங் குவது போலப் பிற குடும்பங்களும் ஒவ்வொரு மொழிக்குள் அடங்கிவிடும். இந்த முறையையே தொடர்ந்து பின்பற்றி னால், இறுதியில், துரேனியம் ஆரியம் சேமியம் என்னும் முக்குல நிலைகளே எஞ்சி நிற்கும். அவற்றையும் ஒன்றாய டக்குவதற்குரிய நெறிமுறைகள் இல்லாமற் போகவில்லை.

(நோவாவுக்கு முந்திய காலத்தில், கி.மு. 3000 ஆண்டு களுக்கு முன்) “உலக முழுவதும் ஒரே மொழியும் ஒரே பேச்சுமாய் இருந்தது” என்று, கிறிஸ்தவ மறையில் ஆதியா கமம் 11ஆம் அதிகாரம் முதற் கிளவியில் கூறப்பட்டுள்ளது.

இன்றும், ஒரு உலக மூலமொழியைத் தேற்றஞ் செய்வதற்கான பல சான்றுகள் உள்ளன. அவையாவன:

(1) மக்கள் தொகை வரவர மிகுதல்.

(2) எல்லாமொழிகளின் அரிவரியும் அ ஆவில் தொடங்கல்.

(3) அம்மா, அப்பா என்னும் பெயர்களும், மூவிடப் பெயர் வினாப்பெயர் வேர்களும், பல சொற்களும் பல மொழி கட்கும் பொதுவாயிருத்தல்.

(4) எண்கள் பத்துப்பத்தாகவே பல நாடுகளில் எண்ணப் படல்.

(5) நெருப்பு, சூரியன், நாகம் முதலியவற்றின் வழிபாடு பண்டை யுலகெங்கு மிருந்தமை.

(6) நெட்டிடையிட்ட நாட்டார்க்கும் கருத்தொருமிப்பு.

கா : ஆங்கிலம் தமிழ்

tonic (from tone)

ஒலித்தல் (தழைத்தல்)

to catch fire

தீப்பற்று

to fall in love

வீழ் (“தாம்வீழ்வார்.....உலகு”)

blacksmith

கருமான்