இயற்கையாய்ப் பொருள் குறித்தெழுந்த உலக முதன் மொழி ஒருவரால் தனிப்பட இயற்றப்பட்டதாகாது. 18. மொழி அசைகளாகவும் சொற்களாகவும் தோன்றிற்று. மொழியின் கடைசிச் சிற்றுறுப்பு எழுத்தாகக் கூறுவது, எழுத்தும் இலக்கணமும் ஏற்பட்ட பிற்காலத்ததாகும். தமிழிலக்கணத்திற் கூறப்படும் நால்வகைச் சொற் களுள், இலக்கணவகைச் சொற்கள் என்று கூறத்தக்கவை பெயர் வினை இடை என்னும் முதல் மூன்றுமே. இறுதியி லுள்ள உரிச்சொல் இலக்கணவகைச் சொல்லன்றென்பது பின்னர் விளக்கப்படும். மூவகைச் சொற்களுள் முந்தித் தோன்றியது இடை; அதன் பின்னது வினை; அதன் பின்னது பெயர். கா : | | | கூ(என்று கத்தினான்) | - | இடைச்சொல் | கூவி | - | வினைச்சொல் | கூவல் | - | பெயர்ச்சொல் |
தமிழுக்கு இலக்கணம் ஏற்பட்டபோது, இம் மூவகைச் சொற்களும் தருக்கநூன் முறைப்படி, கீழிறக்கப் பெருமை முறையில் மாற்றிக் கூறப்பட்டன. மொழித்தோற்றம் முதலாவது சொற்றொடர் அமைப்பைத் தழுவியதென்று சாய்ஸ் கூறுவது, மொழிநூன் முறைக்கு மாறானது. 19. மொழி ஒரே சமயத்தில் உண்டானதன்று. மக்கட்கு வரவரக் கருத்து வளர்கின்றது. அதனால் மொழியும் வளர்கின்றது. முதல் மாந்தன் குழந்தைபோல்வன். அவனுக்கு ஊணுடை முதலிய சில பொருள்களிருந்தால் போதும். நாகரிகம் வளர வளரத்தான் கருத்துகள் பல்கும். அப்போது சொற்களும் பல்கும். மாந்தன் முதன்முதல் தோன்றியதற்கும், மக்கட்குள் கூட்டுறவுண்டானதற்கும் இடையில், நெடுங்காலம் சென்றிருக்க
|