பக்கம் எண் :

108ஒப்பியன் மொழிநூல்

வேறுபடுகின்றன. அதனால், ஒலிப்புமுறையும் வேறு படுகின்றது. மலையாளத்தில் வலி மெலியாதலும் (Nasalization) கன்னடத்தில் பகரம் ஹகரமாதலும், தெலுங்கில் ழகரம் டகரமாதலும் காண்க.

(3) சொற்றிரிபு (Verbal Changes)

i. ஈறுகெடல் (Discardance of Inflection)

ii. ஈறு திரிதல் (Inflectional Changes)

iii. போலி (Mutation)

iv. இலக்கணப்போலி (Metathesis)

v. மரூஉ (Disguise)

vi. சிதைவு (Corruption)

vii. முக்குறை (Apherosis Syncope and Apocope)

viii. முச்சேர்ப்பு (Prosthesis, Epenthesis and Epithesis)

ix. அறுதிரிபு

x. எதுகை (Rhyming)

xi. வழூஉப்பகுப்பு (Metanalysis)

xii. ஒப்பு (Analogy)

xiii. மேற்படையமைப்பு (Superstructure)1

(4) பொருட்டிரிபு (Semantic Changes).

i. வேறுபடுத்தல் (Differentiation)

ii. விதப்பித்தல் (Specialisation of general terms)

iii. பொதுப்பித்தல் (Generalisation of special terms)

iv. இழிபு (Degradation)

v. உயர்பு (Elevation)

vi. விரிபு (Extension)

vii. அணி (Metaphor)

viii. சுருக்கல் (Contraction)


1. உண்டு என்னும் தமிழ் வினைமுற்றைப் பகுதியாகக்கொண்டு உண்டாடு, உண்டாதி முதலிய தெலுங்கு வினைமுற்றுகளை யமைப்பது, மேற்படையமைப்பாகும்.