வடசொற்களைக் கலந்ததும், அம் மொழிகளைத் தமிழி னின்றும் வேறுபடுத்தினதும் திராவிட மொழிகளுக்கு வட மொழியைத் தாயாகக் காட்டியதும், தமிழைத் தாழ்த்திவிட்டு வட மொழியைத் தலைமையாக்கியதும், ஆரியத்தால் திரா விடர்க்கு நேர்ந்த தீமைகளாகும். மிகப் பெரிய திராவிட மன்பதையை ஆரியர் முதலாவது பல பிரிவாகப் பிரித்தது மொழியினால் என்பது, இதனால் விளங்கும். மொழியினால் திராவிடரைப் பல பிரிவாகப் பிரித்தபின், மதத்தாலும் வரண வொழுக்கத்தாலும் தமிழரைப் பல பிரிவாகப் பிரித்தனர்.1 தெலுங்கு, கன்னடம் முதலிய மொழிகள், செந்தமிழ் நாட்டிற்குச் சேயவாதலாலும், சேர சோழ பாண்டிய ஆட்சி கட்கப்பாற்பட்டவாதலாலும், சில நல்ல சொல்வடிவுகளை யுடையவாதலாலும், தமிழினின்றும் பிரிந்து கிளைமொழி களாய், வேறாக வெண்ணப்படுவதற்குத் தகுதியுடையனவே. ஆனால், 12ஆம் நூற்றாண்டுவரை சேரநாட்டுத் தமிழாயி ருந்த மலையாள மொழி, தமிழினின்றும் வேறாக எண்ணப் படுவதற்குச் சற்றும் தகுதியுடையதன்று. மலையாள மொழி யைக் கெடுத்த ஆரியருள் தலைமையானவர், தமிழெழுத்தின் வகைகளான வட்டெழுத்திலும் கோலெழுத்திலுமே தங்கள் மொழியை எழுதிவந்த மலையாளிகட்கு, ஆரியவெழுத்தை யமைத்துக் கொடுத்த துஞ்சத்து எழுத்தச்சன் என்பதற்கு எள்ளளவும் ஐயமேயில்லை. 23. ஒரு மொழி சில காரணத்தால் திரியலாம் : ஒரு மொழி திரிதற்குக் காரணங்களாவன (1) பேசுவோர் நாடோடிகளாயிருத்தல் (2) பேசுவோர் சிறு குழுவினராயிருத்தல் (3) வரிவடிவின்மை (4) அரசியலின்மை (5) தாங்குநரின்மை (6) சிதைவுகாப்பின்மை (7) சொன்மாற்றம் i. பணிவுடைமையால் ii. தனிமக்கள் விருப்பத்தால்
1. இதுபோது நாட்டியலியக்கத்தாலும் தமிழர் பிரிக்கப்படுகின்றனர்.
|