பக்கம் எண் :

12ஒப்பியன் மொழிநூல்

6. “இரு” என்னும் வினைச்சொல்

தமிழ்Skt.Gk.L.Ger.A.S.
இருக்கிறேன் asmi esmi sum bin eom
இருக்கிறோம்'smas esmes sumus sind sind
இருக்கிறாய் asi eis es bist eart
இருக்கிறீர்(கள்) satha este estis seid sind
இருக்கிறான் asti esti est ist is
இருக்கிறார்(கள்) santi eisi sunt sind sind

மேனாட்டாரிய மொழிகட்கும் வடமொழிக்கும் சொற்க ளில் ஒப்புமை யிருப்பதுபோலவே, இலக்கண நெறிமுறை களிலும் ஒப்புமையிருக்கின்றது. அவற்றையெல்லாம் இங்குக் கூறின் விரியும்.

பார்ப்பனர் தென்னாட்டிற்கு வந்த புதிதில், தமிழைச் சரியாய்ப் பேசமுடியவில்லை. இப்போதுள்ள மேனாட்டாரின் தமிழ்ப் பேச்சுப் போன்றே, அக்காலப் பார்ப்பனர் பேச்சும் நகைப்பை விளைவித்தது. அதனால், தொல்காப்பிய மெய்ப் பாட்டியல் (1-ஆம் சூ.) உரையில், ஆரியர் கூறும் தமிழை நகைச் சுவைக்குக் காட்டாக எடுத்துக் காட்டினர் நச்சினார்க் கினியர். கபிலர், நச்சினார்க்கினியர் முதலிய தமிழறிஞர் பலர் ஆரியப் பார்ப்பனரேனும், அவர் ஒரு சிறு தொகை யினரேயாவர். பெரும்பாற்பட்ட பார்ப்பனர் புதிதாய் வந்தவ ராயும் தமிழைச் சரியாகக் கல்லாதவராயும் இருந்தமையின், தமிழைச் செவ்வையாய்ப் பேசமுடியவில்லை. மேனாட்டா ருள் பெஸ்கி, கால்டுவெல், போப், உவின்ஸ்லோ முதலிய பல சிறந்த தமிழறிஞரிருந்ததையும், பிறருக்கு அவரைப்போல் தமிழைச் செவ்வையாய்ப் பேச முடியாமையையும் மேற்கூறிய துடன் ஒப்பிட்டுக் காண்க.

தமிழர்க்கும், வடமொழி அதன் செயற்கையொலி மிகுதிபற்றி நன்றாய்க் கற்க வராமையின், “பார்ப்பான் தமிழும் வேளாளன் கிரந்தமும் வழவழ” என்னும் பழமொழி எழுந்தது. இதனாலும், பார்ப்பனரும் தமிழரும் வேறானவர் என்பதை யறியலாம்.

“ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்” தேவா. (844: 5)

என்று கூறியதும் இக் கருத்துப்பற்றியே.