முன்னர் நேர்ந்திருத்தல் கூடுமென்றும், இரண்டாவது வெள் ளம் எண்ணூறாயிரம் ஆண்டுகட்கு முன்னரும், மூன்றாவது வெள்ளம் இருநூறாயிரம் ஆண்டுகட்கு முன்னரும், நான் காவது வெள்ளம் எண்பதினாயிரம் ஆண்டுகட்கு முன்னரும், ஐந்தாவது வெள்ளம் ஏறக்குறைய ஒன்பதாயிரத்து ஐந்நூறு ஆண்டுகட்கு முன்னரும் நிகழ்ந்திருத்தல் கூடுமென்றும் 'காட்டெலியட்டு' என்னும் நிலநூல் வல்லார் கூறுகின்றார்”1 என்று கா. சுப்பிரமணிய பிள்ளையவர்கள் எழுதுகின்றார்கள். குமரிநாட்டில் நிகழ்ந்த கடல்கோள்களுள், தமிழ்நூல் களிற் குறிக்கப்படுபவை மூன்றாகும். அவையாவன : (1) “பஃறுளியாற்றுடன்.... குமரிக் கோடும்” கொண்டது. இதுவே தலைக்கழகத் தாவாகிய மதுரையின் அழிவு. (2) இடைக் கழகத்தாவாகிய கபாடபுரத்தைக் கொண் டது. இதை, “இடைச்சங்கமிருந்தார்.... தமிழாராய்ந்தது கபாட புரத் தென்ப. அக்காலத்துப் போலும் பாண்டியனாட்டைக் கடல் கொண்டது”2 என்பதனாலறியலாம். (3) காவிரிப்பூம்பட்டினத்தையும் வங்காளக்குடாவில் இருந்து தென்கடல்கள் (South Seas) வரையும் உள்ள பல தீவுகளையுங் கொண்டது. இதை, “தீங்கனிநாவ லோங்குமித் தீவிடை யின்றேழ் நாளிலிருநில மாக்கள் நின்றுநடுக் கெய்த நீணிலவேந்தே பூமி நடுக்குறூஉம் போழ்தத்திந்நகர் நாக நன்னாட்டு நானூ றியோசனை வியன்பாதலத்து வீழ்ந்துகே டெய்தும்” | (மணிமே. 9:17-22) |
“மடவர னல்லாய் நின்றன மாநகர் கடல்வயிறு புக்கது” | (மணிமே. 25:176-7) |
என்னும் மணிமேகலைப் பகுதிகளால் அறியலாம். காவிரிப் பூம்பட்டினம் அழிந்தபோதே குமரியாறும் முழுகினதாகத் தெரிகின்றது.
1. இலக்கிய வரலாறு, ப. 11. 2. இறையனார். ப. 7.
|