பார்ப்பனர் தமிழ்ப்பற்றின்மை, தனித்தமிழை விரும்பாததினாலும், யூனிவர்சிட்டி, ஸ்கூல் பைனல் என்று ஆங்கிலச் சொற்களை மொழிபெயர்க்காது வழங்குவதி னாலும் அறியப்படும். (5) உறையுள் : பார்ப்பனர் எங்கிருந்தாலும் தமிழ ரொடு கலவாது தனித்தே உறைகின்றனர். அக்கிரகாரத்தில் இடம் அல்லது வசதியில்லாதபொழுதே தமிழர் நடுவில் வந்து குடியிருப்பர். அங்ஙனமிருப்பவரும் பெரும்பாலும் ஆங்கிலம் கற்றவராயும் அலுவலாளராயுமேயிருப்பர். அக்கிரகாரத்தில் எக்காரணத்தையிட்டும் தமிழருக்குக் குடியிருக்க இடந்தருவதில்லை. பலவிடங்களிற் சுடுகாடு கூடப் பார்ப்பனருக்குத் தனியாகவுளது. (6) ஒழுக்கம் : பார்ப்பனர் தமிழ முறைப்படி, விருந் தோம்பல், நடுவுநிலைமை முதலிய அறங்கள் இன்மையால் இல்லறத்தாருமல்லர்; கொல்லாமை, துறவு முதலிய அறங் களின்மையில் துறவறத்தாருமல்லர். “இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு.” | (குறள்.81) |
ஒருவர் தம் குலத்தாருக்கு மட்டும் விருந்து செய்வது விருந்தோம்பலாகாது. வேள்வியில் உயிரைக் கொல்வதும் கொலையே. எல்லார்க்கும் பொதுவான அறச்சாலைகளிற்கூடப் பார்ப்பனர் உண்டபிறகே தமிழர் உண்ணவேண்டுமென்ற ஏற்பாடு இன்றும் இருந்துவருகின்றது. இது மிகவுந் திருந்திய திருப்பனந்தாள் மடத்திலும் இருந்துவருவது தமிழர்க்கு மிகவும் நாணுத்தருவதாகும். பார்ப்பனர் தமிழரொடு மணவுறவு கொள்ளாமை பார்ப்பனர் தமிழ்நாட்டிற்கு வந்ததிலிருந்து தமிழரொடு மணவுறவு கொண்டதில்லை. முதன் முதலாகத் தமிழ் நாட் டிற்கு வந்த சில ஆரியர் அரக்க மாதரையோ தமிழ் மாதரையோ மணந்து பின்பு கைவிட்டதாகத் தெரிகின்றது. காசியபர் மாயையை மணந்ததைக் கந்த புராணத்திலும், விசிரவசு கேகசியை மணந்ததை இராமாயணத்திலும் காண்க. இராமனுஜர் சில
|