வடநூல் வகைகளில் ஒன்றானதும் காதை நூலுமான காவியத்தின் பெயர், வடமொழியில் காவியமே தோன்றுமுன், தமிழிலக்கண நூலுக்குப் பெயரான தெங்ஙனமெனின், கூறு கின்றேன். வடநூல்வகைகளில் ஒன்றான புராணம் என்னும் காதை வகைக்கு, படைப்பு, வழிநிலைப் படைப்பு, மரபுவழி, மனுவூழி, சரித்திரம் என்னும் ஐந்தும் கூறுவது இலக்கண மாகக் கூறப்பட்டுள்ளது. ஆயினும், வடமொழியில் புராணமே தோன்றுமுன், தமிழ்நூல்களுக்குப் புராணம் என்னும் பெயர் வழங்கினமை “இனி இடைச்சங்கமிருந்தார்.... என்ப. அவர்க்கு நூல்... மாபுராணமும் ... பூதபுராணமுமென இவையென்ப”1 என்பதனால் அறியப்படும். இங்ஙனமே காவியம் என்னும் பெயரும் என்க. இதனால், காவியம், புராணம் என்னும் பெயர்கள், முறையே, கவியினால் (செய்யுளாலும் நூற்பாவா லும்) செய்யப்பட்டது, பழைமையானது என்னுங் கருத்தில், முதன்முதல் தமிழ்நாட்டில் தமிழ்நூல்களுக்கே ஆரியரால் வழங்கப்பட்டன என்பதும், அவை வடமொழியிற் காதை நூல்களின் பெயரானதும், காவியத்திற்கும் புராணத்திற்கும் இப்போது உள்ள இலக்கணம் வகுக்கப்பட்டது பிற்காலத்தில் என்பதும் அறியப்படும். குலம்: தொல்காப்பியர் தம்மை ஆரிய வேத அறிஞர் என்று காட்டிக் கொள்வதாலும், சில ஆரியக் கருத்துகளைப் புகுத்தியிருப்பதாலும், தமிழர் களவியலை ஆரியர் காந்தரு வத்திற் கொப்பாகக் கூறியிருப்பதாலும் நான்மறை முற்றிய அதங் கோட்டாசான் தலைமையில் தம் நூலை அரங்கேற்றி யதாலும் தொல்காப்பியத்தில் உள்ள சில இலக்கண வழுக்க ளாலும் தொல்காப்பியர் ஆரியர் என்று துணியப்படும். தொல்காப்பிய வழுக்கள் (1) “சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே அஐ ஒளஎனும் மூன்றலங் கடையே” | (தொல். மொழி. 29) |
“சரிசமழ்ப்புச் சட்டி சருகு சவடி சளிசகடு சட்டை சவளி - சவிசரடு |
1. இறை. பக். 7.
|