யிருத்தலானும்....ஆசிரியர் தொல்காப்பியனார்க்கு வேதங்கள், ப்ராதிசாக்கியங்கள், தர்ம சாத்திரங்கள், யாஸ்க நிருத்தம், நாட்டிய சாத்திரமோ அதன் முன்னூலோ ஆகிய வடமொழி நூல்களிற் பயிற்சியுண்டு என அறியக்கிடக்கின்றது” என்று தம் தொல் காப்பிய எழுத்ததிகார முகவுரையிற் கூறி, கீழே அடிக்குறிப்பில், “அந் நூல்கள் தற்போதுள்ள ஆராய்ச்சியா ளர்களால் கி.பி. 3, 4 நூற்றாண்டுகளுக்கு முன்னருள்ளன எனக் கூறப்படுகின்ற மையான் தொல்காப்பியம் கி.பி. இரண்டாவது நூற்றாண்ட தாகும்” என்று சாத்திரியார் கூறியுள்ளது, நெஸ்ப்வீல்டு (J.C. Nesfield) ஆங்கிலத்தில் எழுதிய இலக்கண நூல்களிற் சொல்லப் பட்டவற்றிற்கும், தொல்காப்பியத்திற் சொல்லப்பட்டவற்றிற்கும், சில பொருள் களில் ஒற்றுமையிருப்பதால், நெஸ்ப்வீல்டு இலக்கணத்தைப் படித்துத்தான் தொல்காப்பியர் தம் இலக்கண நூல் இயற்றி னார் என்றும், போப் (G.U. Pope) ஆங்கிலத்தில் எழுதிய திருவாசகத்தைத்தான் மாணிக்கவாசகர் தமிழில் மொழி பெயர்த்தாரென்றும் கூறுவது போன்றதேயன்றி வேறன்று. தொல்காப்பியத்தின் செந்தமிழ் நடையொன்றே, அந் நூலின் தொன்மையைக் காட்டற்குப் போதுமானது. தொல்காப்பியத்திற் பயின்று வரும் 'அலங்கடையே', 'இவ ணையான' 'சிவணும்' 'ஓரன்ன' முதலிய சொற்றொடர்களும், தொல் காப்பியத்தின் வடசொல்லருகிய தனித்தமிழ்க் கால நிலையை உணர்த்துவனவாகும். பல்கலைக்கழக அகராதியின் பதிப்பாளராகிய வையா புரிப் பிள்ளை அவர்கள், தொல்காப்பியத்தில், பாயிரத்துள் வந்துள்ள 'படிமையோன்' என்னும் சொல்லும், நூலுள், உயிர்களை அறிவுத் தொகைபற்றி ஆறு வகையாகப் பகுத்த பாகுபாடும், சமண மதத்திற்குரியவாதலின், தொல்காப்பியர் சமணரென்று முடிவுசெய்ததுடன், 'படிமை' என்ற சொல் தமிழ்ச்சொல்லாகத் தோன்றவில்லை என்று தம் தமிழறியா மையையும் புலப்படுத்தி யிருக்கின்றார்கள். படிமை என்ற சொல் படி என்னுஞ் சொல்லடியாகப் பிறந்தது. படு-படி-பதி. படுதல் - வீழ்தல். படு என்னுஞ் சொல்லே படி, பதி எனத் திரியும். படிதல் - பதிதல். ஒரு பொருள் இன்னொரு
|