(1) வரணம் : பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் ஆரிய வரணப்பாகுபாடும், அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் தமிழ வரணப்பாகு பாடும் ஒன்றேயென்று மேனோக்காய்ப் பார்ப்பாருக்குத் தோன்றும்; ஆனால், அவை பெரிதும் வேறுபாடுடையன. ஆரியருள், பிராமணர் என்பார் ஒரு குலத்தார்; தமிழ ருள், அந்தணர் என்பார் ஒரு வகுப்பார்; அதாவது பல குலத்தினின்றும் தோன்றிய சித்தரும், முனிவரும் யோகியரு மான பல்வகைத் துறவிகள். “அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்” | (குறள்.30) |
என்று திருவள்ளுவர் 'நீத்தார் பெருமை'யிற் கூறியிருத்தல் காண்க. ஆரியருள், க்ஷத்திரியர் என்பார் சீக்கியரும் கூர்க்கரும் போன்ற மறக் குலத்தாரும் அரசரும் ; தமிழருள், அரசர் என்பார் அரசப் பதவியினர் ; அதாவது, சேர சோழ பாண்டியர் என்னும் மூவேந்தரும் அவர்க்குக் கீழ்ப்பட்ட பாரி காரி போன்ற சிற்றரசரும். ஒவ்வொரு நாட்டிலும் அங்கங்குள்ள குலத்தலைவரே அரசராவர்; அரசரென்று ஒரு தனிக்குலம் இல்லை. ஆரியருள், வைசியர் என்பார் வணிகம், உழவு ஆகிய இரு தொழிலும் செய்பவர்; தமிழருள், வணிகர் என்பார் வணிகம் ஒன்றே செய்பவர். ஆரியருள், சூத்திரர் என்பார் பலவகையிலும் பிற ருக்குத் தொண்டுசெய்பவரும், பூணூல், வேதக்கல்வி முதலி யவற்றிற்கு உரிமையில்லாதவருமான கீழ்மக்கள்; தமிழருள், வேளாளர் என்பார் உழுதும், உழுவித்தும் இருவகையில் உழவுத்தொழில் ஒன்றே செய்பவரும் எல்லாவுரிமையுமுடை யவருமான மேன் மக்கள். ஆரியப் பாகுபாட்டில் நாற்பிரிவும் குலமாகும்; தமிழப் பாகுபாட்டில் வணிகர், வேளாளர் என்னும் இரு பிரிவே குலமாகும். அவற்றுள்ளும், வணிகக்குலம் வேளாண் குலத்தினின்றே
|