பக்கம் எண் :

பண்டைத் தமிழகம்189

வதியுந் தாதுண் பறவை' எனவே, பிரிவஞ்சி யென்றவாறு. மணி நாவொலி கேட்பின் வண்டு வெருவுமாகலின் அது கேளாமைமணிநாவினை இயங்காமை யாப்பித்த மாண் வினைத் தேரனாகி வாராநின்றானென இவையெல்லாந் தலை மகள் வன்புறைக் கேதுவாயின. 'கறங்கிசை விழவினுறந் தைக் குணாது, நெடும்பெருங் குன்றத் தமன்ற காந்தள்.' தெய்வமலை ஆகலான் அதனுளமன்ற காந் தளைத் தெய்வப் பூவெனக் கூறி, அவை போதவிழ்ந்தாற் போல அவர் புணர்ந்த காலத்துப் புதுமணங் கமழ்ந்த நின் கைத்தொடிகள் அவை அரியவாகிப் பிரிந்த காலத்துப் போன்று வடிவொத்து மனங்குறைபட்ட துணையேயால் அவர் பிரிந்து செய்த தன்மையினென, இதுவும் வன் புறைக்கே உறுப்பாயிற்று”1

அணியிலக்கணம் : அணியை முற்காலத் தமிழர் யாப் பினின்றும் பிரிக்கவில்லை. உவமையின் வேறுபாடுகளையும், எழுத்திலக் கணத்திலும் சொல்லிலக்கணத்திலுமுள்ள பல அமைதிகளையுமே பிற்காலத்தார் அணியிலக்கணமாகப் பிரித்துக் காட்டினர்.

“உவமை யென்னுந் தவலருங் கூத்தி
பல்வகைக் கோலம் பாங்குறப் புனைந்து
காப்பிய வரங்கிற் கவினுறத் தோன்றி
யாப்பறி புலவ ரிதய
நீப்பறு மகிழ்ச்சி பூப்ப நடிக்குமே.”
2

“இனி, இவ் வோத்தினிற் (உவமவியல்) கூறுகின்ற உவமங்களுட் சிலவற்றையும், சொல்லதிகாரத்தினுள்ளுஞ் செய்யுளியலுள்ளும் சொல்லுகின்றன சில பொருள்களையும் வாங்கிக்கொண்டு, மற்றவை செய்யுட்கண்ணே அணியாமென இக்காலத்தாசிரியர் நூல் செய்தாருமுளர். அவை ஒரு தலையாகச் செய்யுட்கு அணியென்று இலக்கணங் கூறப்படா; என்னை? வல்லார் செய்யின் அணியாகியும் அல்லார் செய்யின் அணியன்றாகியும் வருந்தாங் காட்டிய இலக்கணத்திற் சிதையா வழியுமென்பது.....

“இனி, இரண்டுபொரு ளெண்ணியவற்றை வினைப்படுக் குங்கால் ஒருங்கென்பதோர் சொற்பெய்தல் செய்யுட்கு அணி


1 தொல். செய்.103. பேராசிரியர் உரை.

2 மாறனலங்காரம்; வரலாறு, பக். 10.