பக்கம் எண் :

முன்னுரை 25

மேன்மட்டங்களிலுள்ள செறிவற்றவுமான கட்டடங்களை வியக்கத்தக்க வகையில் ஒத்திருப்பதால், அவற்றைப் பின் பற்றியே கட்டப்பட்டன என்பது ஐயமறத் துணியப்படும். இஃது எங்ஙனமிருப்பினும், மொகஞ்ஜோ-தாரோவிலுள்ள பெருங் குளிப்பகத்தையும், தனித்தனி கிணறும் குளிப்பறை யும் விரிவு பட்ட சலதாரையொழுங்குங் கொண்ட, அறை வகுத்த பயம்பாடு மிக்க வீடுகளையும், அந் நகரப் பொது மக்கள் அக்கால நாகரிகவுலகத்தின் மற்றப் பகுதிகளிலுள் ளார் எதிர்பாராத அளவு, வசதியும் இன்பமும் நுகர்ந்தார்கள் என்பதற்குச் சான்றாகக் கொள்வது தக்கதே.”

“இப் புதிய கண்டுபிடிப்புகள், இந்தியாவின் முந்திய நாகரிகங்களை மட்டுமல்ல, பண்டைக் கீழகம் முழுவதை யுமே பற்றிய தற்காலக் கருத்துகளை மாற்றுவனவாயிருக் கின்றன. (உலக சரித்திரத்தில்) இந்தியாவின் பழங்கற்கால மனிதன் நடித்த பகுதியின் முக்கியம், நெடுங்காலமாக ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. பழங்கற்காலத்திற்குரிய கரட்டுமலை முகடுகளையும், புதுக் கற்காலத்திற்குரிய கரட்டு மலை முகடுகளையும் வடிவச்சு நூற்படி ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இந்திய நிலத்திலேயே, பின்னவை முன்ன வற்றினின்றும் முதலாவது திரிந்திருக்க வேண்டுமென்று ஊகிக்கப்படுகின்றது.

“தற்சமயம், நம் ஆராய்ச்சிகள் நம்மைக் கிறிஸ்துவுக்கு 4000 ஆண்டுகட்கு முன்மட்டுமே கொண்டுபோய், இச் சிறந்த நாகரிகத்தை மறைக்கின்ற திரையின் ஒரு மூலையை மட்டும் தூக்கியிருக்கின்றன. மொகஞ்ஜோ-தாரோவில்கூட, இதுவரை மண்வெட்டிகொண்டு வெட்டினதற்குங் கீழாக, ஒன்றன்கீழொன்றாய், இன்னும் பல முந்திய நகரங்கள், புதைந்து கிடக்கின்றன.

“மொகஞ்ஜோ-தாரோ, ஹரப்பா என்னும் ஈரிடத்தும், தெளிவாகவும், பிழைபாட்டிற்கிடமின்றியும் தோன்றுகின்ற ஒரு செய்தியென்னவென்றால், இவ் வீரிடங்களிலும் இது வரை வெளிப்படுத்தப்பட்ட நாகரிகமானது, இந்திய நிலத் தில் பல்லாயிர வாட்டை மாந்தனுழைப்பைக் கீழ்ப்படை யாகக் கொண்டு, ஊழிமுதியதாய் நிலைத்துப்போன ஒன்றே யன்றிப் புத்தம்புதிதான ஒன்றன்று என்பதே.”1


1. Mohenjo-Daro, Vol.I, Preface, pp.v-vii