பரத்துவாஜ கௌசிக காசிப வத்ஸ கோத்திரங்களைச் சேர்ந்த, பல பார்ப்பனக் குடும்பங்களை வரவழைத்துத் தொண்டை நாட்டிற் குடியேற்றி அவற்றிற்கு நிலங்களை யளித்தான். பப்பன் காலத்துக்கு முன், பிராமணர்கள் தமிழ் நாட்டில் அதிகமாகப் பரவியிருந்ததாக அடையாளம் ஒன்றும் காணோம். கொஞ்சமாய்த்தான் இருந்திருக்க வேண்டும் என்று1 பி.தி. ஸ்ரீநிவாஸய்யங்கார் கூறுகிறார். சுந்தரபாண்டியரென்னும் அரசர், பல ஊர்களில் இருந்த நூற்றெட்டுத் தலவகார சாமவேதிகளாகிய வைணவப் பார்ப்பனரைத் தென்திருப்பேரையில் இருத்தி, அவர்களுக்கு வீடுகளும், நிலங்களும் வழங்கினதாகச் சொல்லப்படுகின்றது. தமிழ்நாட்டிற் பார்ப்பனரின் ஐவகை நிலை (1) பாங்கன் (Companion) “காமநிலை உரைத்தலும் தேர்நிலை உரைத்தலும் கிழவோன் குறிப்பினை எடுத்துக் கூறலும் ஆவொடு பட்ட நிமித்தங் கூறலும் செலவுறு கிளவியும் செலவழுங்கு கிளவியும் அன்னவை பிறவும் பார்ப்பார்க் குரிய” | (கற்பு. 36) |
“பார்ப்பான் பாங்கன் தோழி செவிலி.. களவிற் கிளவிக் குரியர் என்ப.” | (செய். 181) |
“பேணுதகு சிறப்பிற் பார்ப்பான் முதலா.. தொன்னெறி மரபிற் கற்பிற் குரியர்” | (செய். 182) |
இத் தொல்காப்பிய நூற்பா(சூத்திரம்)க்களால், முதன் முதலாகத் தமிழ்நாட்டிற் பார்ப்பனர் ஏற்ற அலுவல், பாங்கன் தொழிலே என்று தெள்ளத்தெளியக் கிடக்கின்றது, பாங்கனாவான் அரசர்க்கும், சிற்றரசர்க்கும் பாங்கிலிருந்து ஏவல் செய்து, மனைவியும் பரத்தையுமான இருவகை மகளிரொடுங் கூட்டுபவன். பார்ப்பனர் 'அறு வகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்' என்று புறத்திணையியல் (19) நூற்பாவில் கூறியுள்ள படி ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்னும் அறுவகைத் தொழில்கள் செய்துவந்தாரேனும், அவை
1. பல்லவர் சரித்திரம், முதற்பாகம், ப. 3.
|