யென்றும் கூந்தலென்றும் கூறப்பட்டன. குடுமி என்பது உச்சிப் பாகத்திலுள்ளதைக் குறிக்கும். "அன்னாய் வாழிவேண் டன்னை நம்மூர்ப் பார்ப்பனக் குறுமகப் போலத் தாமுங் குடுமித் தலைய மன்ற நெடுமலை நாட னூர்ந்த மாவே" | (ஐங். 202) |
என்னும் ஐங்குறுநூற்றுச் செய்யுளில், குதிரையின் தலை யாட்டத்திற்குப் பார்ப்பனச் சிறுவனின் குடுமியை உவமை கூறியிருப்பது, அது தமிழச் சிறுவனின் குடுமியினும் மிகச் சிறிதாயிருந்தமை பற்றியே. மீசை: மீசையைச் சிரைத்துக்கொள்ளும் வழக்கம் ஆரியரதே. தமிழரிற் சிலர் மேனாட்டாரியரைப் பின்பற்றி இப்போது மீசையைச் சிரைத்துக்கொள்கின்றனர். (2) உடை: பார்ப்பனருள் ஆடவர் பஞ்சகச்சம் கட்டு கின்றனர்; பெண்டிர் தாறு பாய்ச்சிக் கட்டுகின்றனர். இவை தமிழர் வழக்கமல்ல. விசுவப் பிராமணரென்று தங்களைக் கூறிக்கொள்ளும் கம்மாளர், பார்ப்பனரோடு இகலிக் கொண்டே சிலவிடத்து அவரது உடுமுறையைப் பின் பற்றுகின்றனர். நூல்: பூணூலணிதல் பார்ப்பனர்க்கே உரியது, 'நூலெனிலோ கோல்சாயும்' என்னுஞ் செய்யுளும், 'ஊர்கெட நூலைவிடு' என்னும் பழமொழியும் இதனை வற்புறுத்தும். தமிழ்நாட்டு வணிகரும் ஐவகைக் கம்மியரும் பூணூல் பூண்டது, அறியாமைபற்றி ஆரிய முறையைச் சிறந்ததாகக் கருதிய பிற்காலமாகும். ஆரியம் தமிழ்நாட்டில் வேரூன்றிப் பார்ப்பனருக்குத் தலைமையேற்பட்டபின், பல தமிழ் வகுப்பினர் தங்களுக்கு ஆரியத் தொடர்பு கூறுவதை உயர்வாகக் கருதினர். ஆரியக் குலமுறைக்கும் திராவிடக் குலமுறைக்கும் இயைபு இல்லா விடினும், ஆரியரல்லாதவரெல்லாம் சூத்திர வகுப்பின் பாற்பட்டவர் என்னும் தவறான ஆரியப் பொதுக்கொள்கைப் படி, தமிழரெல்லாருக்கும் சூத்திரப் பொதுப்பட்டம் சூட்டின பிற்காலத்தில், தமிழ் நாட்டிலுள்ள
|