வடசொற்கலப்பினால் தமிழுக்கு நேர்ந்த தீங்குகளாவன : (1) தமிழ்ச்சொற்கள் வழக்கற்று மறைதல். (2) தமிழின் தூய்மை கெடல். (3) தமிழ்ச்சொற்கள் பொருளிழத்தல். குடும்பம், இல், குடி, குலம், வரணம், மரபு என்னும் பெயர்கள், முறையே ஒரு சிறிய அல்லது பெரிய (ஒரு தலை முறையுள்ள அல்லது பல தலைமுறையடங்கின) குடும் பத்தையும், தாய்வழி தந்தைவழிகளையும், கோத்திரத்தையும், ஜாதியையும், நிறம்பற்றிய (வெண்களமர், கருங்களமர், அல்லது ஆரியர், திராவிடர் என்பனபோன்ற) பெரும் பிரிவு களையும், குலவழித் தொடர்பையும்(descent) குறிப்பன வாகும்.1 ஆனால், இப் பொருள் வேறுபாடு இன்று எல் லார்க்கும் புலனாவதில்லை. பசும் பால் என்பது காய்ச்சாத பாலையும், பசிய நிறமான வெள்ளாட்டுப் பாலையும் குறிப்பதாகும்2 பசுவின்பால் பசுப்பால் என்றே கூறத்தக்கது. பசுப்பாலை ஆவின்பால் என்றனர் முன்னோர். காட்டு என்னும் தமிழ்ச்சொல்லுக்குப் பதிலாக, உதாரணம் என்னும் வடசொல் வழங்கவே, அது தன் பொரு ளையிழந்து காண்பி என்னும் பொருளில் வழங்குகின்றது. (4) புதுச்சொற் புனைவின்மை தனித்தமிழ் வளர்ந்திருந்தால், ஆஸ்திகம், நாஸ்திகம் என்னும் வடமொழிப் பெயர்களுக்குப் பதிலாக உண்மதம், இன்மதம், அல்லது நம்புமதம், நம்பாமதம் என்பனபோன்ற தென்மொழிப் பெயர்கள் வழங்கியிருக்கும். (5) தென்சொல் வடசொல்போலத் தோன்றல் கலை, மீனம் முதலிய தனித்தமிழ்ச் சொற்கள் வட சொற்கள் போலத் தோன்றுகின்றன.
1. ஒருபொருட் பல சொற்கள் பருப்பொருளில் ஒன்றையே குறிப் பினும், நுண்பொருளில் வேறுபட்டவை என்பதை Handbook of the English Tongue என்னும் புத்தகத்தின் 25ஆம் 26ஆம் பக்கங்களிலும், Hints on the study of English என்னும் புத்தகத்தின் 49ஆம் 50ஆம் பக்கங்களிலும் காண்க. 2. அந்தகக்கவி வீரராகவர் சரித்திரம் காண்க.
|