மொழிகளாகிய பிராகிருதங்களைக் கலந்து செயற்கையாக அமைத்துக்கொண்ட சமற்கிருதம் என்னும் வடமொழிமீது வரையிறந்த பற்றும், தாம் பேசும் வட்டாரமொழிகளில் இயன்றவரை சமற்கிருதத்தைக் கலப்பதும், அவரெல்லார்க் கும் பொதுவியல்பாகும். வடமொழி செயற்கையான வடிவில் மிக முதிர்ந்ததா தலின் வழக்குறாது போய்விட்டது. ஆனாலும், பிராமணரின் வழியினரான பார்ப்பனர் இன்று வடமொழியைத் தம்மாலி யன்ற வரை பாதுகாத்து வருகின்றனர். பிராமணர் இந்தியா வில் எந்த இடத்திலிருந்தாலும், எந்த மொழியைத் தாய்மொழி யாகக் கொண்டிருந்தாலும் வடமொழிப் பயிற்சியைமட்டும் விடார். மற்ற வகுப்பாரோ பெரும்பாலும் தத்தம் தாய்மொழி களையே அறிந்திருப்பர். வடமொழியின் கடினம்பற்றிச் சில பார்ப்பனர் அதைக் கல்லாதிருப்பினும், அதன்மேல் வைத்தி ருக்கும் பற்றில் மட்டும், அதைக் கற்றவரினும் எள்ளளவும் குறைந்தவராகார். பார்ப்பனர் பிற மொழிகளைத் தாய்மொழி களாகக் கொண்டிருப்பதும், வடமொழி வழக்கற்றவிடத்து வேறு போக்கின்றியேயன்றி வேறன்று. பார்ப்பனர் வடமொழியைப் பேசாவிடினும் வளர்ப்பு மொழியாகக் கொண்டுள்ளமையின், அவர்க்கு வடமொழி யாளர் என்று பெயர். மணிமேகலையில், 'வடமொழியாளர்' (5:40) என்று பார்ப்பனர்க்கும், 'வடமொழி யாட்டி' (13:78) என்று பார்ப் பனிக்கும் வந்திருத்தல் காண்க. வடமொழிக்குத் தமிழ் நூல்களில் ஆரியம் என்னும் பெயரும் வழங்குகின்றது. இப் பெயரொன்றே பார்ப்பனரைத் திராவிடரினின்று வேறான ஆரியராகக் கொள்ளப் போதிய சான்றாகும். ஆரிய நாடு, ஆரியபூமி, ஆரியாவர்த்தம் என்று சொல்லப்படுவது பனி (இமய) மலைக்கும் விந்திய மலைக் கும் இடையிலுள்ள பாகமாகும். இதுதான் ஆரியர் இந்தியா வில் முதலாவது பரவி நிலைத்த இடம். இங்கு வழங்கினதி னால்தான் ஆரிய மொழிக்கு 'வடமொழி' யென்றுபெயர்.
|