பக்கம் எண் :

84ஒப்பியன் மொழிநூல்

பல திராவிடச் சொற்களுள்ளன என்னுங் கொள்கைகளில், இவருடன் ஒன்றுபட்டவர், இவர் தமிழைச் சிறப்பாயா ராய்ந்தது போன்றே மலையாள மொழியைச் சிறப்பாயா ராய்ந்தவர் டாக்டர் குண்டட் (Gundert) ஆவர். இவ்விரு வர்க்கும் திராவிடவுலகம், விதப்பாய்த் தமிழுலகம் பட்டுள்ள கடன் மாரிக்குப் பட்டுள்ளதேயெனினும் பொருந்தும்.

கால்டுவெல், மாக்கசு முல்லர் என்ற இருவர் ஆராய்ச்சிகளே இந் நூலுக்கு முதற்காரணமாகும்.

மொழிநூற்கலைக்கு ஆங்கிலத்தில் முதலிலிருந்து வழங்கி வரும் பெயர்கள் 'Philology' (Gk.-L. philos, desire; logos, discourse), 'Glottology' (G.k.L Glotta, tongue; logos, discourse) என்பன. இவற்றுள் முன்னையதே பெருவழக்கு. ஆனால், மாக்கசு முல்லர் 'Science of Language' என்று தாம் இட்ட பெயரையே சிறப்பாகக் கொண்டனர்.

மொழிநூலுக்கு ஆங்கிலத்தில் Linguistics, Linguistic Science என்றும் பெயருண்டு.

'Philology' என்னும் பெயர் விரும்பிக் கற்கப்படுவது என்னும் பொருளது. கிரேக்கும் லத்தீனும், மேனாட்டாரால் இலக்கிய மொழிகளென விரும்பிக் கற்கப்பட்டதினால், இப் பெயர் தோன்றிற்று.

தமிழில், முதன்முதல் தோன்றிய மொழிநூற் பனுவல், மாகறல் கார்த்திகேய முதலியார் 1913ஆம் ஆண்டு வெளியிட்ட 'மொழிநூல்' ஆகும். 'மொழிநூல்' என்னும் குறியீடும் அவரதே. அதன் பின்னது டாக்டர் சுப்பிரமணிய சாத்திரியார் அவர்கள் எழுதி 1936-ல் வெளியிட்ட 'தமிழ் மொழிநூல்' ஆகும்.

அதன்பின்னது, கலைத்திறவோரும் (M.A.) சட்டத்திற வோரு (M.L.)மான கா. சுப்பிரமணியப் பிள்ளை அவர்கள் எழுதி, 1939ஆம் ஆண்டில் வெளிவந்த 'மொழிநூற் கொள்கையும் தமிழ்மொழி அமைப்பும்', என்பதாகும்.

மொழிநூல் நிலை

உலகில் ஒவ்வொரு கலையும்,

(1) ஆய்வுநிலை (Empirical Stage),

(2) பாகுபாட்டுநிலை (Classificatory Stage),