போன்ற நூல்களைத் துணைக்கொண்டு தமிழியல்பை ஆராய்வது, நரிவாலைக்கொண்டு கடலாழம் பார்ப்பதும், தந்தையை மகன் பெற்றதாகக் கொள்வதும் போன்றதே. அந் நூல்களைக் கற்பதால் உண்டாகும் பயன், மலைகல்லி எலி பிடித்தல் போல மிகச் சிறியதாகும்; மேலும், உண்மை காணாதபடி மயக்கத்தையும் ஊட்டும். மொழிநூல் ஆராய்ச் சிக்கு வேண்டிய மனவிரிவையடைவதற்கு, ஆங்கிலத்தில் மாரிஸ் (Morris), ஆங்கஸ் (Angus), ஸ்கீற்று (Skeat), ஸ்வீற்று (Sweet), உவிட்னி (Whitney) முதலியோர் எழுதிய இலக்கணங் களைப் படித்தல் வேண்டும். நுண்ணறிஞரும் பெரும் புலவருமான வேங்கடராஜு லு ரெட்டியார் வடமொழியையும் பிற்காலத் திலக்கணங்களையும் பின்பற்றியதால் தாம் எழுதியுள்ள 'இலக்கணக் கட்டுரைகள்', 'திராவிட மொழியின் மூவிடப் பெயர்' என்னும் இலக்கணங்களுள், சில சோர்வு பட்டுள்ளார். அவையாவன: (1) தமிழில் உகரவீற்றுச் சொற்கள் மூன்றே யென்பது. தொல்காப்பியத்தில், மொழிமரபில், “உச்ச காரம் இருமொழிக் குரித்தே” “உப்ப காரம் ஒன்றென மொழிப” | (41, 42) |
என்று கூறியது, முற்றியலுகர வீற்றையேயன்றிக் குற்றியலுகர வீற்றையன்று. குற்றியலுகரம் ஈரெழுத்திற்குக் குறையாத சொல்லின் ஈற்றில் வல்லின மெய்யூர்ந்தன்றித் தனித்துவருதல் இல்லை என்று சொல்லப்படுகிறது. மறுகு, செருக்கு என்பனபோன்ற சொற்களினிடையிலும், அது, பொறு என்பன போன்ற சொற் களின் ஈற்றிலும் உள்ள உகரத்தை (இக்கால வியல்பு நோக்கி)க் குற்றியலுகரமேயெனக் கொள்ள இடமிருப்பினும், உ, து எனத் தனித்தும், உரல், முகம் எனச் சொன் முதலிலும் வரும் உகரத்தைக் குற்றியலுகரமாகக் கொள்ள எள்ளளவும் இடமில்லை. 'உகரம்', 'குற்றுகரம்', 'குற்றியலுகரம்' என்னும் சொற்களில் வரும் உகரங்களும் முற்றியலுகரங்களே, இவற்றுள் பின்னவற்றில் குறு, 'குற்றியல்' என்னும் அடை மொழிகளால், குறுகிய உகரம்
|