|
இளைத்தல்
இளகல் = மெல்லிதாதல், சிறிதாதல்.
இளகு - இளக்கம் - இளக்காரம். இளம் + கரி = இளக்கரி.
இளக்கரி + அம் = இளக்காரம் (தொ. பெ.). இளகிய நிலை
இளக்கம். ஒருவரை எளிதாயெண்ணி வரம்பிறந் தொழுகற்கிடமான
நிலை இளக்காரம். இளகு, இழுது = இளக்கமுள்ள நெய்.
இளகு - (இணகு) - இணங்கு. இணங்கல் = மனமிளகி யிசைதல்.
இள - இளது - இளசு = சிறியது, பிஞ்சு,
இள் - இளை - இனை. இனைதல் = எளிய நிலையடைந்து
வருந்துதல்.
இளமை, இளவல், இளையான், இளைஞன். இள்
< எள் - ஏள்- ஏளனம். ஏள் - ஏசு. எள் - எளி. ஏள் -
ஏழை - ஏதை. ஏள் + இதம் - ஏளிதம். எள் (சிறிய கூலம்).
இள - இளை - எய். எள்ளல் = இகழ்தல். ஏட்டை, ஏடாகோடம்,
ஏடாகி, ஏட்டிக்குப்போட்டி.
சிறுமை
இகழ் = சிறிதாய் நினை. இம்மி = சிற்றரிசி,
ஒரு சிற்றளவு. இல் -
இல்லி = சிறு பொத்தல். இல் = சிறியது.
இல் - இல்லை.
ஒ.நோ: குன்றுதல் = இல்லாமை.
எ-டு: செயப்படுபொருள்
குன்றியவினை (Intransitive
Verb).
செயப்படுபொருள்
குன்றாவினை (Transitive Verb).
Cf. less = (1) in a low degree, (2) absent
Ex. (l) less money, (2) senseless.
இல் - இலகு - இலசு (லேசு) = சிறியது. கனமில்லாதது,
எளியது.
Skt. laghu, Gk. elachys, L. levis, Ger. leight,
A.S. leoght, E. light, Ice. lettr, Fr. aise, It. agio,
E. ease.
இல் (குறுமையீறு): எ-டு : புட்டில் (புட்டி +
இல்); தொட்டில் (தொட்டி + இல்). Cf.
ille, el. dim. sfxs. Ex. Fr. bouteille, E. bottle, E.
damsel.
இல்-அல். Cf.
He is not here, he is not Nambi.
E.&;L. in, im, E., Gk. &; Skt. an, a A.S.,
E.un.
அல் + அது - அல்லது = அல்லாதது, அடுத்தது.
Gk.allos, L. alias, E. alias.
அல் -அன் - ன (ந). அன் என்பது இலக்கணப்
போலியாய் வடமொழியில் ’ந’ ஆகும். அல் - அ.
இலது < லேது. இல் < லே (தெலுங்கு) - இலக்கணப்போலி
(Metathesis).லே
< னே < னை. நை (இந்தி) = இல்லை.
O.G. ni, Goth. ni, A.S. ne, M.E., Ice. nei,
Dan. nei, E.nay, no. அல் < அன் <
ன. Skt. na.
சிட்டு = சிறு குருவி. சிட்டி = சிறு கலம்.
சீட்டு = சிற்றோலை.
|