|
பொதுக்கெனல் = உள்ளிறங்கற் குறிப்பு.
பொல் = பொருந்து. பொற்ப = பொருந்த,
போல (உவமவுருபு).
பொல் - பொரு - பொரும் - பொருந் -
பொருந்து. பொரு = பொருந்து, பொருந்திப்
போர்செய், மோது. பொரும்போது இருபடையும்
பொருந்துதல் காண்க. ஒ. நோ: சமம் - சமர் = போர்.
கைகல = சண்டையிடு; கல - கலகம். பொல் - பொன்.
பொல் + அம் - பொலம். பொல் + பு - பொற்பு. பொற்ற
(சிந்தா.)
ஒ.நோ: ஒப்பி, ஒப்பனை. பொல்லாத -
பொல்லா (காரிகையாசிரியர் கூற்று) = அழகில்லாத.
பொரு - பொருவு = ஒப்பு. பொருவ = போல (உவமவுருபு).
பொருந்-பொருநை = "கல்பொரு திரங்கும்" ஆறு.
பொருந் - பொருநன் = போர்மறவன். பொருந்து -
பொருத்து = பொட்டு (temple).
பொரு - போர்.
Cf. A.S. werre, O.Fr. werre, O.Ger. werra,
E. war.
பொல் - (பொல்லம்) = பொருத்தம்,
போர்.
L. bellum, war, E. ballicose, belligerent.
பொரு - பொருள் = பொருந்திய பண்டம்,
செல்வம். ஒ.நோ: உடன் - உடமை.
பொல் - போல் = (வி.) பொருந்து,
ஒப்பாகு; (பெ.) உட்டுளை. போல = ஒக்க (உவமவுருபு).
போல் - போலி.
முட்டற்கருத்தும் பிறகருத்துகளும்
முள் = (வி.) முற்சென்று பொருந்து, கூரிய
முனையாற் குத்து, விரல் நுனியாற் கிள்ளு, உட்புகு;
(பெ.) ஊசி, ஊசிபோன்ற உறுப்பு, உட்குவிவு. முள் -
முளம். முளவு = முள், முள்ளம்பன்றி. முளம் - முளர் -
முளரி = முள்ளுள்ள தாமரை. முள் - முண்டு - முண்டகம் =
நீர்முள்ளி. முள் - முள்ளி.
முள் - முளம் - மளம் - மயம். பரி + மளம் -
பரிமளம். மளம் = மணம்.
முள் - முள - முய - முயல் - மயல் = கலப்பு,
மயக்கம், கலந்த குப்பை.
முய - முயங்கு = கல, தழுவு. முயங்கு - மயங்கு =
கலகலங்கு.
பல பொருள்கள் ஒன்றாய்ச் சேரும்போது
பொருட்கலக்கமும் மனமயக்கமும் உண்டாகும்.
மயல் - மையல் - மனத்தைக் கலக்கும்
பெருங்காதல். மயல் - மால் = மயக்கம்,
பெருங்காதல், கண்ணை மயக்கம் இருட்டு, கருப்பு,
மேகம், கரிய திருமால், இருண்மிகுதி.
மால் - மாலை = பூக்கலந்த கோவை, பகலும்
இரவுங் கலந்த அல்லது இருண்ட நேரம், ஒரு பொருளுடன்
கலந்த குணம்.
"மாலை யியல்பே" (தொல்.
796)
முள் - முள்கு = பொருந்து, கல.
|