1. |
வாழ்க
வாழ்கவே வாழ்க வாழ்கவே |
|
ஆழி குழும்
அவனி ஆளும் அரசன் வாழ்கவே. |
|
|
2. |
மாத மாதமாய்
மாரி வாழ்கவே |
|
சாதிகளைச்
சரிப்படுத்தும் சதுரன் வாழ்கவே. |
|
|
3. |
வேதம்
வாழ்கவே வேள்வி வாழ்கவே |
|
நீதியாவும்
நிலைநிறுத்தும் நிருபன் வாழ்கவே. |
|
|
4. |
மறையோர் வாழ்கவே
மணங்கள் வாழ்கவே |
|
குறைகள் யாவும்
நீக்கும் ஜார்ஜு கோமான் வாழ்கவே. |
|
|
5. |
போகம் வாழ்கவே
புண்யம் வாழ்கவே |
|
ஏக மாக ஆளும்
ஜார்ஜு இறைவன் வாழ்கவே. |
|
|
6. |
தர்மம் வாழ்கவே
தனமும் வாழ்கவே |
|
ஜெர்மன் சண்டை
யில்ஜெயித்த சேயன் வாழ்கவே. |
|
|
7. |
தந்தை தாயைப்போல்
தாமே முதல்முதல் |
|
இந்தியாவில் பட்டம்
பெற்ற இருவர் வாழ்கவே. |
|
|
8. |
வாழ்க வாழ்கவே வையம்
வாழ்கவே |
|
ஊழி ஊழி ஐந்தாம்
ஜார்ஜு உரகன் வாழ்கவே! |