பக்கம் எண் :

செந்தமிழ்க் காஞ்சி 85

6
   6. உன்னைப் போலப் பொறுமையுடன்
  ஊழியம் செய்வார் உலகினில் யார்?
   
   7. வண்ணான் தேடி வருகிறான்
  அன்னை என்னைத் தேடுவாள்.

15ஆம் பாடம்

நாய்

'பாவஞ்செய்யாதிரு நெஞ்சே' என்ற மெட்டு

   1. நாய்ஒரு நல்ல பிராணி - அது
  நன்றி மறவாத நாற்கால் பிராணி.
   
   2. ஓநாய் நரிஅதன் இனமே - அது
  பூனையைக் கண்டதும் பொங்கிடும் சினமே.
   
   3. நாக்கு நன்றாய் மெதுமாகும் - அது
  நக்கி நக்கி நீரைக் குடிப்பதற்காகும்.
   
   4. நெஞ்சு பெரிதாக இருக்கும் - அது
  நெடுந்தூரம் போகவே உதவியா யிருக்கும்.
   
   5. வாலில் இருப்பது வளைவு - அது
  மட்டை வைத்துக் கட்டினாலும் மாறாது.
   
   6. எசமானைக் கண்டால் வாலாட்டும் - அதன்
  நிசமான மகிழ்ச்சியை நின்றாடிக் காட்டும்.
   
   7. ஊளை யிட்டுத் துயர்கூறும் - அது
  உறுமி உறுமியே கோபத்தில் சீறும்.
   
   8. வீட்டைக் காக்கும் சிலநாய்கள் - அவை
  வேற்றாளைக் கண்டாலோ விரைந்துமேல் பாயும்.
   
   9. வேட்டையும் சிலநாய்கள் பிடிக்கும் - அவை
  காட்டுப் பன்றிகளின் கன்னத்தில் கடிக்கும்.
   
   10. நாயை வளர்ப்பது நன்று - அது
  நம்பத்தக்க காவல்காரருள் ஒன்று.