| தமிழ்ப்பற்றாளர் கொள்கை | தமிழ்ப்பகைவர் கொள்கை |
| 1. தமிழன் பிறந்தகம் குமரிநாடு. தமிழர் தென்னாட்டுப் பழங்குடி மக்கள். | தமிழர் வெளிநாட்டினின்று வந்தவர் |
| 2. மாந்தன் பிறந்தகமும் குமரிநாடே | |
| 3. தமிழ்திரவிடத்திற்குத் தாயும ஆரியத்திற்கு மூலமுமாகும். | தமிழ் திரவிடத்தை யொத்தது; ஆரியத்தாற் பெரிதும் வளம் படுத்தப்பட்டது. |
| 4. இந்திய நாகரிகம் தமிழரது. | இந்திய நாகரிகம் பல இனத்தாரின் கூட்டு நாகரிகம். |
| 5. தமிழ் இயன்மொழி, தனி மொழி | தமிழ் திரிமொழி, கலவை மொழி. |
| 6. கடன் கொள்வதால் தமிழ் தளரும் | கடன் கொள்வதால் தமிழ் வளரும். |
| 7. இறையனாரகப் பொருளுரை யினின்று பெரிதும் வேறுபட்ட முக்கழகங்கள் பண்டைத் தமிழகத் திருந்தன. | பண்டைத் தமிழகத்தில் ஒரு கழகமும் இருந்ததில்லை. |
| 8. தமிழே வழிபாட்டு மொழி யாகவும் சடங்கு மொழியாகவும் இருத்தல் வேண்டும். | வடமொழியே வழிபாட்டு மொழியாகவும் சடங்கு மொழியாகவும் தொடர்தல் வேண்டும். |
| 9. தமிழ்நாட்டிற்கு இருமொழித் திட்டமே ஏற்றது. | தமிழ்நாட்டிற்கும் மும்மொழித் திட்டம் ஏற்கும். |
| 10. இந்தியப் பொதுமொழியா யிருக்கத்தக்கது ஆங்கிலமே. | இந்தியப் பொதுமொழியா யிருக்கத்தக்கது இந்தியே. |