கா : உடையது - உடைத்து. கண் + அது = கண்ணது; கண் + து = கட்டு. தாள் + அது = தாளது; தாள் + து = தாட்டு. அன் + அது = அன்னது; அன் + து = அற்று. பால் + அது = பாலது; பால் + து = பாற்று. பிற தன்மை வினையீறுகள் தன்மைப் பெயர்களும் அவற்றின் திரிபுமாகும். ஒருமை : ஏன் - என். (நான்) - (ஆன்) - அன் - அல். பன்மை : ஏம் - எம். (நாம்) - ஆம் - அம். (கண்டும் செய்தும் முதலியவற்றிலுள்ள) உம் - ஓம். முன்னிலை வினை முன்னிலைவினை, ஏவல்வினை செயல்வினை என இருவகைப்படும். செயல்வினை ஒருமை ஈறுகள் முன்னர்க் கூறப்பட்டன. ஏவல்வினை, ஒருமை பன்மையென இருவகைப்படும். அவற்றுள், ஒருமை பின்வருமாறு எழுவகையாயிருக்கும்: (1) பகுதி : கா : செய், போது. (2) முன்னிலைப் பெயரீறுடையது. கா :(செய்நீ) - (செய்தீ)- செய்தி. (3) வேண்டுகோ ளெதிர்மறைமுற்று. கா : செய்யாய் (செய்). (4) எதிர்கால வினைமுற்று. கா : செய்வாய். (5) நிகழ்கால வினையெச்சம். கா : செய்ய. (6) தொழிற்பெயர். கா : செயல். (7) துணைவினைபெற்றது. கா : செய்ய + விடு = செய்யட்டு. பன்மையேவல் பின்வருமாறு அறுவகைப்படும். (1) முன்னிலைப்பெயரீறு பெற்றது (நீர்) - (தீர்) - திர். | கா : செய்திர். | நூம் - நும் - உம். | கா : செய்யும். | உம் + கள் = உங்கள் | கா : செய்யுங்கள். | உம் + (ஈம்) - (இம்) - இன். | கா : செய்யுமின், செய்மின். |
(2) வேண்டுகோளெதிர்மறைமுற்று. கா : செய்யீர்.
|