கா : வாழ் + து = வாழ்த்து. து - சு. பாய் + சு = பாய்ச்சு. துவ்வீறே புணர்ச்சியில் டு று வாகும். கா : காண் + து + காட்டு, உருள் + து = உருட்டு, தின் + து = தீற்று, நால் + து = நாற்று. செய்யப்பண், வரச்செய் முதலியன துணைவினை பெற்றவை. குறைவினை (Defective Verb) எல்லாத் திணைபா லிடங்கட்கும் புடைபெயராத வினை குறைவினையாகும். கா : வேண்டும், கூடும், போதும். வேண்டு = விரும்பு. எனக்கு அது வேண்டும் = யான் அதை விரும்புவேன். விருப்பம் இங்குத் தேவையைக் குறிக்கும். நீ அதைச் செய்யவேண்டும் = நீ அதைச் செய்ய யான் விரும்புவேன். உனக்கு என்ன வேண்டும் = நீ என்ன விரும்புவாய். 'செய்யும்' என்னும் வாய்பாட்டு எதிர்கால வினை முற்றாகிய 'வேண்டும்' என்பது, இன்று பொருள்மறைந்து வழங்குகின்றது. இது தொல்காப்பியர் காலத்திற் முன்பே தொடங்கினதாகும். வழுவமைதி வினை (Anamolous Verb) கா : அல்லேன் - வழாநிலை. (நான்) அல்ல - வழுவமைதி. ஒட்டுவினை மற்றச் சொற்களோடு சேர்ந்தே வழங்கும் வினை ஒட்டு வினை. கா : (ஆகும்) ஆம் - செய்யலாம், செய்தானாம். ஆக்கும் - (ஆகும்) செய்வானாக்கும், புலவனாக்கும். துணைவினை (Auxiliary Verb) கா : (செய்ய) முடியும், நீராடு, புரந்தா, அலம்வா.
|