பக்கம் எண் :

உலக முதன்மொழிக் கொள்கை 173

= அகங்காரம்.

“ களிமடி மானி”

(நன். 39)

= அளவு, வரையறை, விலக்கு.

“ மெய்ந்நிலை மயக்கம் மான மில்லை”

(மொழி. 14)

என்பதன் உரையில் நச்சினார்க்கினியர் மானம் என்பதற்குக் குற்றமென்று பொருள் கூறியது குற்றமாகும். டாக்டர் பி.எஸ். சாஸ்திரியார் ஆனம் என்று பிரித்தது அதினும் குற்றமாகும். “ கடிநிலை யின்றே” (புள்ளி. 94), “ வரைநிலை யின்றே” (புள்ளி. 104) என்று தொல்காப்பியர் பிறாண்டுக் கூறுவதை, “ மான மில்லை” என்பதனுடன் ஒப்பு நோக்குக.

= அளவு கருவி.

= அளவு, ஒரு தொழிற்பெயரீறு. கா : சேர்மானம்.

மானம் (மதிப்பு) x அவமானம். அவி + அம் = அவம் = அழிவு. மானம் என்பது, அளவு அளவை என்னும் பொருளில் வடமொழியில் மாணம் என்று திரியும். கா : பரிமாணம், பிரமாணம். மானம் என்பதினின்று மானி மானு என்னும் வினைகள் தோன்றும்.

மானித்தல் = அளத்தல் வெப்பத்தை அளப்பது வெப்பமானி.
= மதித்தல். கா : அபிமானி (இரு பிறப்பி). மதித்தளிக்கும் நிலம் மானியம் -மானிபம்.
= அளவையாலறிதல். கா : அனுமானி. உவமானம் (ஒத்த அளவு) - உபமான (வ.)

உவத்தல் - விரும்பல், ஒத்தல். ஒ.நோ: like = to be pleased with, to resemble. விழைய நாட என்பவை உவம வுருபுகள்.

உவமை - உவமம் - உவமன். உவமை - உபமா (வ).

மானுதல் = ஓரளவாதல், ஒத்தல். மான (போல) உவம வுருபு. மானம் என்னும் சொல்லே மோன மூன் முதலிய பல வடிவுகளாகத் திரிந்து மேலையாரிய மொழிகளில் நிலாவைக் குறிக்கும்.