பக்கம் எண் :

19

உண்மையுடைமை யென்னுங் குணம், நினைவு சொல் செயல் என்ற முக்கரணங்களையுந் தழுவியது என்பதை உணர்த்தற்கு, உண்மை (உள்+மை), வாய்மை (வாய்+மை), மெய்ம்மை (மெய்+மை) என மூன்றுசொற்கள் தமிழிலுள்ளன.

மனத்தின் வெவ்வேறு வினையையுங் குறித்தற்கு வெவ்வேறு சொல் உளது.

கா : உள்(ளு), to will (உள்ளம் - will); உணர், to feel, to comprehend (உணர்வு - sentiment, உணர்ச்சி - feeling); நினை, to think, to remember (நினைவு - thought, நினைப்பு - memory); நினைவுகூர், to remember, to commemorate; முன்(னு), to propose, to think, to intend (முன்னம் - intention, indication); முன்னிடு, to propose, to set before; முன்னிட்டு, having proposed, having set before, for the purpose of. ஒரு காரியத்தை முன்னிட்டு என்னும் வழக்கை நோக்குக. முன்னீடு = proposal; உன்(னு), to imagine (உன்னம் - imagination); உன்னி, to guess (உன்னிப்பு - guessing); எண்(ணு), to deliberate, to consider (எண்ணம் - consideration); கருது, to conceive, to think (கருத்து - concept, idea); அறி, to know (அறிவு - knowledge); கொள், to opine (கோள் - opinion, கொள்கை - doctrine); மதி, estimate, to regard (மதிப்பு - estimation, approximation, respect, மதி - sense); தீர்மானி, to determine, to resolve; நய to appreciate (நயப்பு - appreciation); தெருள், to perceive clearly; மருள், to be deluded; ஆய், to test, to examine, (ஆய்வு - test); ஆராய், to make a critical study, to investigate (ஆராய்ச்சி - research, critical study); சூழ், to counsel, to deliberate, சூழவை - council.

உளத்தொழில்பற்றி இன்னும் பல சொற்களுள. இவற்றொடு துணைவினை சேர்த்துக்கொள்ளின், இக்காலத்திய மனத்தொழில் நுட்பவேறுபாடுபற்றிய கருத்துகளை யெல்லாம் குறிக்கச் சொற்களை யமைத்துக்கொள்ளலாம்.

மனைவிக்குக் கணவனோடுள்ள புலவியின் மூன்று நிலைகளையுங் குறித்தற்கு, முறையே ஊடல், புலவி, துனி என மூன்று சொற்கள் உள்ளன.

ஒரு வினைக்குத் தகுந்த சமையம், நல்ல கருத்தில் செவ்வி என்றும் தீய கருத்தில் அற்றம் என்றும் கூறப்படுகின்றது