பக்கம் எண் :

பண்டைத் தமிழகம் 49

அம் + காளம் (அல்லது காளி) + அம்மை = அங்காளம்மை.

மாரி = சாவு. காளி அழிப்புத் தெய்வமாகக் கருதப்பட்டதால் மாரியெனப்பட்டாள். மடங்கலை அவளுக்கு ஊர்தியாகக் கொண்டதும் இக் கருத்துப்பற்றியே.

பீழை - பீடை + அரி = பீடாரி (மரூஉப் புணர்ச்சி).

ஒ.நோ: பனை + அட்டு = பனாட்டு. அரித்தல் அழித்தல்.

துன்பத்திற்குக் காரணமானவளே அதை அழிப்பவளாகவுங் கருதப்பட்டாள்.

பீடாரி - பிடாரி. பிடாரி = அம் = பிடாரம்.

கன்னி என்றும் இளையோளா யிருப்பவள். குமரி என்னும் பெயரும் இப் பொருட்டே.

கும் + அம் = குமம் - குமர் = திரட்சி, இளமை, கன்னிமை.

ம் - ர், போலி. ஒ. நோ: சமம் - சமர்.

“குமரிருக்குஞ் சசிபோல்வாள்”

(குற்றா. தருமசாமி. 47)

கும் - குமி - குவி. குவிவு - குவவு = திரட்சி.

குமர் + அன் = குமரன். குமர் + இ = குமரி.

குமரன் = திரண்டவன், இளைஞன், முருகன்.

குமரி - திரண்டவள், இளையள், கன்னி, காளி.

ஒ.நோ: இளவட்டம் = இளைஞன். வட்டம் = உருட்சி.

E. vergin, from Gk. orago, to swell.

கும்மை - கொம்மை = திரட்சி. ஒ.நோ: குட்டு - கொட்டு.

குமரன் - குமாரன்(.). குமரி - குமாரி (.) - குமாரத்தி.

பகவதி (பகவன் என்பதின் பெண்பால்) கன்னி என்னும் பெயர்கள் பின்னர்க் கூறப்படும்.

“வளிதருஞ் செல்வனை வாழ்த்தவு மியைவதோ”

(கலித். 15)

என்பதால், சூரியனும் பாலைநிலத்தில் வணங்கப்பட்டமை அறியப்படும். 'சுடரோடிரத்தல்' என்னும் கோவைத் துறையும் இதையுணர்த்தும்.