சிவன் திருமால் என்னும் தமிழ்த் தெய்வங்களோடு, முறையே ருத்திரன் விஷ்ணு என்னும் ஆரியத்தெய்வங்களை இணைத்துவிட்டனர் ஆரியர். ஆரியர்க்கு ருத்திரன் புயற் காற்றுத் தெய்வமும் விஷ்ணு சூரியத் தெய்வமுமாகும். காளிக்குச் சிறந்த இருப்பிடம் சுடலையாதலானும், பேய்கட்குத் துணங்கைக் கூத்து உரியதாதலானும், காளியின் கணவனான சிவபெருமான் சுடலையாடி யெனப்பட்டார். சிவபெருமானுடைய முத்தொழிலையே திருக்கூத்தாக உருவகித்தனர் உயர்ந்தோர். 1சைவம்பற்றிய சில தமிழ்க் குறியீட்டுப் பொருள்கள் ஆனைந்து (பஞ்ச கவ்யம்) ஆனைந்தை (துடிசைகிழார் அ. சிதம்பரனார் செந்தமிழ்ச் செல்வியிற் கூறுகிறபடி) பால் தயிர் வெண்ணெய் மோர் நெய் என்று கொள்ளுவதே பொருத்தமாயிருக்கிறது. ஆனைந்தைப் பஞ்ச கவ்யம் என்று மொழிபெயர்த்துக் கூறினதுடன், பால், தயிர், நெய், கோமூத்திரம் சாணம் என்று பிறழக் கூறிவிட்டனர் ஆரியர். திருநீறு சிவபெருமான் தம்மை யடைந்தவரின் தீவினையை எரித்து விடுகிறார் என்னுங் கருத்துப்பற்றியதே, திருநீற்றுப் பூச்சாகத் தெரிகின்றது. நீறு = சுண்ணம், பொடி. பூதியென்பது நீற்றின் மறுபெயர். பூழ்தி (புழுதி) - பூதி. ஒ.நோ: போழ்து (பொழுது)-போது. பூதி = பொடி, தூள். பூதியை 'வி' என்னும் முன்னொட்டுச் சேர்த்து, விபூதியென்று வடசொல்லாக்கினர். உருத்திராக்கம் உருத்திர + அக்கம் = உருத்திராக்கம். உருத்திரன் என்று சிவபெருமானுக் கொரு பெயர் தமிழிலேயேயிருந்தது. உருத்தல் = சினத்தல், தோன்றுதல். உரும் = நெருப்பு, சினம், இடி. உருமி = புழுங்கு. உருமம் = உச்சி வேளை. உருப்ப = அழல (புறம். 25). உரு என்ற சொல் முதலாவது
1. சிவநெறியைச் சைவம் என்றது திரிபாகுபெயர் (தத்திதாந்தம்). இவ் வியல்பு தமிழுக்குஞ் சிறுபான்மை யுண்டென்பதைப் பைத்தியம் என்னுஞ் சொல்லானுணர்க. பித்து (gall - bladder) - பித்தம் (bile) - பைத்தியம் (insanity).
|