பக்கம் எண் :

70ஒப்பியன் மொழிநூல்

நாடும் வெற்றியும் அடைவதை நில மகளையும் வயமகளையும் மணப்பதாக மெய்க்கீர்த்தி மாலைகள் கூறுவதையும், “திருவுடையரசரைக் காணின் திருமாலைக் கண்டேனென்னும்” என்னும் திவ்வியப் பனுவற் கூற்றையும் நோக்குக.

இராமன் தவஞ் செய்துகொண்டிருந்த ஒரு சூத்திரனைக் கொன்றும், கண்ணன் நால்வகைக் குலமும் பிரமாவின் படைப்பேயென்று கூறியும், பிராமணீயத்தை வளர்த்ததினால் மிகப் போற்றப்பட்டதாகத் தெரிகிறது.1

கந்தபுராணத்தில், கந்தன் பிறப்புத் தவிர, மற்றைய வெல்லாம் (பெரும்பாலும்) தென்னாட்டுச் செய்திகளே.

பஞ்சதந்திரக் கதைகளிற் பல தென்னாட்டில் வழங்கியவை.

ஹாலாஸ்ய மான்மியம், உபமன்யு பக்த விலாசம் முதலியவையும் பல தலப் பழைமைகளும் தென்னாட்டுச் செய்திகளைக் கூறுபவை.

அடிமுடி தேடிய கதை திருவண்ணாமலையில் தோன்றியது.

முப்புரம் எரித்த கதை வடவிலங்கையில் தோன்றியது. மாந்தையிலிருந்த முக்கோட்டைகள் நிலநடுக்கத்தாலோ எரிமலையாலோ பன்முறை அழிந்துபோயின. ஓரழிவு பௌத்தமதம் இலங்கையிற் புகுந்தபின் நிகழ்ந்தது. அது வரை சைவமே அங்கு வழங்கிவந்தது. அதனால் திருமால் புத்தவடிவுகொண்டு தாரகாட்சன் முதலிய மூவரைப் பௌத்தராக்கி, பின்பு சிவபெருமானால் அவர்க்கு அழிவு நேர்வித்ததாகக் கதை கட்டப்பட்டது. (கதிரைமலைப் பள்ளைக் காண்க.)

ஜனமேஜயன் கதை மைசூர் நாட்டில் தோன்றியது.2

பண்டைக்காலத்தில், திருமாலியர்க்குத் திருவரங்கமும் சைவர்க்குத் தில்லையுமே சிறந்த திருத்தலங்களாகவிருந்தன. அதனால் அவற்றிற்குக் கோயில் என்றே பெயர்.

கங்கைநாட்டிலிருந்த பார்ப்பனர் தென்னாட்டிற்குக் குமரியாட வந்தனர்.


1. இக்காலத்தில் வரணாசிரமத்தைத் தாங்கும் திருவாளர் காந்தியை, மகாத்மாவென்றும் முனிவர் என்றுங் கூறுதல் காண்க.

2. Illustrated Weekly of India Oct. 33, 1938, p. 22