பக்கம் எண் :

76ஒப்பியன் மொழிநூல்

ஆத்திரேலிய மொழிகட்கும் தமிழுக்கும் உள்ள ஒப்புமை1

(1) சகர வேறுபாடுகளும் மூச்சொலிகளு மில்லாமை.

(2) பின்னொட்டுச் சொற்களாலேயே பெரும்பாலும் புதுச் சொற்கள் ஆக்கப்படல்.

(3) ஆத்திரேலிய மொழிகளில் உயர்திணைப் பெயர்களும் அஃறிணைப் பெயர்களும் வேறுபடுத்தப் படாமை.
முதுபழந் தமிழிலும் இங்ஙனமே யிருந்தது.
கா: மண்வெட்டி, விறகுவெட்டி; சலிப்பான் (சல்லடை).

(4) 'அர்' பன்மையீறா யிருத்தல்.

தமிழர், முண்டர், நாகர், ஆத்திரேலியர் என்பவர் பண்டு ஓரினத்தாரா யிருந்ததாகத் தெரிகின்றது.

இலங்கையில் பண்டு வழங்கியது தமிழென்றும், ஈழநாட்டரசர்க்கு முடிநாகர் என்ற பேர் இருந்ததென்றும், முத்துத்தம்பிப் பிள்ளையவர்கள் 'செந்தமிழ்'ச் சுவடிகையில்(Magazine) எழுதியிருப்பது பொருத்தமானதே.

ஆத்திரேலியர் திராவிடரைப் பலவகையில் ஒத்திருப்பதாக மாந்தனூலார் கூறுகின்றனர்.

தமிழர் நீக்கிரோவர்க்கும் ஆரியர்க்கும் இடைப்பட்டோராதல்

இதற்குச் சான்றுகள்

(1) கடாரத்தில் முதன் முதல் இராக்கதர் (Monsters) வாழ்ந்தனர் என்னும் ஒரு வழக்குண்மையாலும்,2 நக்க வாரத்தில் நரவூனுண்ணிகளிருந்தமை மணிமேகலையிற் கூறப்படுவதாலும், இலங்கைக்குத் தெற்கே அசுரர் என்னும் ஓர் இராக்கத வகுப்பாரிருந்தமை கந்தபுராணத்தாலறியப் படுவதாலும், தென்மேற்குத் திசைத்தலைவனாக நிருதியென்றோர் அரக்கன் குறிக்கப்படுவதாலும், இன்றும் தென் மேற்கிலுள்ள ஆப்பிரிக்கர் அரக்கவினமா யிருப்பதாலும், பண்டு தமிழகத்தின் கிழக்கிலும் தெற்கிலும் மேற்கிலும் மாந்தனின் 2ஆவது நிலையினரான நீக்கிரோவர் வாழ்ந்தனர் என்பது அறியப்படும். இராக்கதர்


1. L.S.I. p. 14

2. L.S.I., p. 14

`