பக்கம் எண் :

92ஒப்பியன் மொழிநூல்

பிறழ்ந்தவைபிறழாதவை

அத்ய = இன்றைக்கு

இ(த்)தி = இப்படி

அத்ர = இங்கே

இத்தம் = இவ்வாறு, E. item.

இந்தியில் இதர் உதர் என்ற சொற்கள் தமிழியல்புப் படியே யிருத்தல் காண்க.

(4) சொற்கள் தோன்றிய பிறவகைகள்

சைகையும் சொல்லும் : இத்துணைப்போல, அவ்வளவு.

ஒப்புமை : காடைக்கண்ணி, ஆனைக்கொம்பன், கரடிகை.

எழுத்துத்திரிபு : புழலை - புடலை, பெள் - பெண்.

திரிசொல் : கிளி - கிள்ளை, மயில் - மஞ்ஞை.

மரூஉ : பெயர் - பேர், கிழவர் - கிழார்.

முதன்மெய்நீக்கம் : சமர் - அமர், தழல் - அழல்.

முதன்மெய்ப்பேறு : ஏண் - சேண்.

சிதைவு : எம்மாய் - யாய், நும்மாய் - ஞாய், தம்மாய் - தாய்.

போலி : நாலம் - ஞாலம், நெயவு - நெசவு, குதில் - குதிர்.

இலக்கணப்போலி - சிவிறி (எழுத்துமாற்று), வாயில் (சொன் மாற்று), கோயில் (உடம்படுமெய்ம்மாற்று).

முக்குறை

முதற்குறை : தாமரை - மரை, ஆட்டுக்குட்டி - குட்டி.

இடைக்குறை : வட்டை - வடை, உருண்டை - உண்டை.

கடைக்குறை : தம்பின் - தம்பி, கோன் - கோ.

அறுதிரிபு (உலக வழக்கு)

வலித்தல் : கொம்பு - கொப்பு, ஒளிர் - ஒளிறு, பதர் - பதடி.

மெலித்தல் : போக்கு - போங்கு.

நீட்டல் : நடத்து - நடாத்து, கழை - கழாய்.

குறுக்கல் : ஆங்கு - அங்கு.

விரித்தல் : - முதல்விரி : காயம் - ஆகாயம்.